உலகை திரும்பிப் பார்க்க வைத்த லித்தியம்- எங்கெல்லாம் அகழாய்வுகள்? லோக்சபாவில் திருமாவளவன் கேள்வி
லித்தியம் அகழாய்வுப் பணிகள் 20 இடங்களில் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: லித்தியம் தொடர்பாக எங்கெல்லாம் அகழாய்வுப் பணிகள் நடைபெறுகின்றன என லோக்சபாவில் விசிக எம்.பி. தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

பேட்டரிகள் தயாரிப்புக்கு மிக முக்கியமான மூலப் பொருளாக இருப்பது லித்தியம். இத்தகைய லித்தியம் பேட்டரிகளை நாம் இறக்குமதிதான் செய்து வருகிறோம். சீனா, ஹாங்காங் உள்ளிட்டவை இந்தியாவுக்கு லித்தியம் பேட்டரிகளை ஏற்றுமதி செய்கின்றன.
நவீன உலகத்தில் அனைத்தும் பேட்டரிமயமாகிவிட்டது. இதனால் லித்தியம் பேட்டரிகளின் பயன்பாடும் முதன்மையானதாகிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் தனிமம் கண்டறியப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரின் சலால் ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டெல் லித்தியம் கனிம வளம் இருக்கிறது என்கிறது மத்திய அரசு. ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்த கண்டறிதல் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
இந்நிலையில் லித்தியம் தொடர்பான அகழாய்வுப் பணிகள் குறித்து லோக்சபாவில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. திருமாவளவனின் கேள்வியும் மத்திய அரசின் பதிலும்:
அ) இந்தியாவில் லித்தியம் அகழாய்விற்காக அரசாங்கம் ஏதேனும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதா; (ஆ) அப்படியானால் அதன் விவரங்கள்; (இ) பொது நிறுவனங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் அல்லது பொது-தனியார் நிறுவனங்களின் கூட்டாண்மை மூலமாகவோ வெளிநாட்டில் லித்தியம் சுரங்கங்களை கையகப்படுத்தும் திட்டம் ஏதேனும் அரசுக்கு உள்ளதா? (ஈ) அப்படியானால் அதன் விவரங்கள்;
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எழுப்பிய மேற்கண்ட கேள்விகளுக்கு நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி அளித்த பதில்:

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்திய புவியியல் ஆய்வு [GSI], சுரங்க அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட அலுவலகம், லித்தியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கூறுகள் மீது 20 திட்டங்களை ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், ஜம்மு & காஷ்மீர், மத்திய பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மேற்கொண்டுள்ளது. 2022 -- 23 கால களத் திட்டங்களில் அருணாச்சல பிரதேசம், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், ஜார்கண்ட், மேகாலயா, நாகாலாந்து, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் லித்தியம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கூறுகளுக்கான 18 திட்டங்களை ஜிஎஸ்ஐ எடுத்துள்ளது. ஆனாலும் ஜிஎஸ்ஐ-யால் இன்னும் லித்தியம் வளம் அதிகரிக்கப்படவில்லை. லடாக்கில் சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் & கன்சல்டன்சி லிமிடெட் என்னும் ஒரு சி.பி.எஸ்.இ லித்தியத்தை ஆய்வு செய்யும் திட்டத்தை மேற்கொண்டுள்ளது.
மேலும், அணு கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான இயக்குநரகம், கர்நாடகாவின் மாண்டியா மற்றும் யாத்கிர் மாவட்டங்களின் சில பகுதிகளில் அணுசக்தித் துறையின் ஓர் பிரிவு லித்தியத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கானிஜ் பிதேஷ் இந்தியா லிமிடெட் (KABIL), சுரங்க அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மூன்று CPSEகளின் கூட்டு நிறுவனம் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் லித்தியம் சுரங்கங்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications