தமிழகத்துக்கு வரிப் பகிர்வு ரூ.7,268 கோடி! உ.பியை ஒப்பிட்டால் 5 தென் மாநிலங்களுக்கும் செம்ம ஆப்பு!
டெல்லி: வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024 அக்டோபரில் வழங்கவேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக முன்கூட்டிய தவணையான ரூ. 89,086.50 கோடியும் இதில் அடங்கும். தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. ரூ. 89,086.50 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது.

வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி / நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதியளிக்கவும் ஏற்றவகையில் இந்த வரிப்பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2024 அக்டோபரில் வழங்கவேண்டிய வழக்கமான தவணையுடன் கூடுதலாக முன்கூட்டிய தவணையான ரூ. 89,086.50 கோடியும் இதில் அடங்கும். தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் அதிகமான வரிப் பகிர்வாக ரூ31,962 கோடி விடுவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த தொகையான 5 தென் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட வரிப் பகிர்வின் மொத்த தொகையையும் விட கூடுதலானது.
5 தென் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு விவரம்:
ஆந்திரா -ரூ. 7,211 கோடி
கர்நாடகா - ரூ. 6,498 கோடி
தமிழ்நாடு- ரூ. 7,268 கோடி
தெலுங்கானா- ரூ. 3,745 கோடி
கேரளா ரூ. 3,430 கோடி
5 தென் மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தமான வரிப் பகிர்வு ரூ.28,152 கோடிதான். இந்த தொகையை விட கூடுதலாக உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு மட்டும் வழங்கி இருக்கிறது மத்திய அரசு.
மாநிலங்கள் வாரியாக மத்திய அரசு விடுவித்துள்ள வரிப் பகிர்வு விவரம் முழுமையாக:


-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications