போதைப்பொருட்களுக்கு எதிரான போரில் மத்திய அரசின் ”மானஸ்” மையம் + இலவச உதவி எண் 1933.. பிரதமர் மோடி
டெல்லி: போதைப் பொருட்களுக்கு எதிரான போரில் இலவச ஆலோசனைகள் வழங்குவதற்காக மத்திய அரசு மானஸ் என்ற சிறப்பு மையத்தை தொடங்கி உள்ளது. இந்த மையத்துக்கான இலவச உதவி எண் 1933ஐ தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெறலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தமது வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத் என்கிற மனதின் குரலில் இன்று பேசுகையில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி உரை: மனதின் குரலில் நான் அடிக்கடி போதைப் பொருட்கள் சவாலைப் பற்றிப் பேசியிருக்கிறேன். தங்கள் வீட்டுப் பிள்ளைகள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவார்களோ என்ற கவலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் இருக்கிறது. ஆனால் அப்படி அடிமையாகிவிட்டவர்களின் உதவிக்காக, அரசாங்கம் ஒரு சிறப்பான மையத்தைத் திறந்திருக்கிறது, இதன் பெயர் மானஸ். போதைப்பொருட்களுக்கு எதிரான போரிலே இது மிகப்பெரிய முன்னெடுப்பு.

இலவச உதவி எண்: சில நாட்கள் முன்பாகத் தான் மானஸின் உதவி எண்ணும், இணைய முகப்பும் துவக்கப்பட்டன. அரசாங்கம் ஒரு இலவச உதவி எண்ணான 1933 என்பதை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதோடு தொடர்பு கொண்டால் கண்டிப்பாகத் தேவையான ஆலோசனைகள் அளிக்கப்படும் அல்லது மறுவாழ்வோடு தொடர்புடைய தகவல்களைப் பெறலாம்.
போதைப் பொருட்கள் தகவல்: யாரிடமாவது போதைப் பொருட்களோடு தொடர்புடைய வேறு தகவல்களும் இருந்தால், அவர்கள் இதே எண்ணோடு தொடர்பு கொண்டு Narcotics Control Bureau - போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்திடமும் தெரிவிக்கலாம்.
போதைப் பொருள் இல்லாத பாரதம்: மானஸ் அமைப்பிடம் தெரிவிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் இரகசியமானவையாக பாதுகாக்கப்படும். பாரதத்தைப் போதைப்பொருட்கள் இல்லாத நாடாக ஆக்குவதில் இணைந்திருக்கும் அனைவரிடத்திலும், அனைத்துக் குடும்பங்களிடத்தாரிடமும், அனைத்து அமைப்புக்களிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், மானஸ் உதவி எண்ணை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான்.
ரூ. 1.50 லட்சம் கோடி காதி விற்பனை: நண்பர்களே, கைத்தறியோடு கூடவே நான் காதி பற்றியும் பேச விரும்புகிறேன். உங்களில் பலர் கதராடைகளை முன்பு பயன்படுத்தியிருக்க மாட்டீர்கள், ஆனால் இப்போதெல்லாம் மிகப் பெருமையோடு கதராடைகளை உடுத்தி வருவீர்கள். காதி கிராமோத்யோக் பவனத்தின் வியாபாரம் முதன்முறையாக ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கிறது என்பதைத் தெரிவிப்பதில் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. சிந்தித்துப் பாருங்கள்!! ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய்!! காதிப்பொருட்களின் விற்பனை எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறது தெரியுமா? 400 சதவீதம்.
கதாராடை வாங்குங்கள்: காதிப் பொருட்களின், கைத்தறி ஆடைகளின், இந்த வளர்ந்துவரும் விற்பனை, அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பின் புதிய சந்தர்ப்பங்களை உருவாக்கி வருகிறது. இந்தத் தொழிலோடு மிக அதிக அளவில் பெண்கள் இணைந்திருக்கிறார்கள் எனும் போது, மிகப்பெரிய ஆதாயமும் கூட அவர்களுக்குத் தானே ஏற்படுகிறது!! நான் மீண்டும் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், உங்களிடத்திலே வகைவகையான ஆடைகள் இருக்கலாம், நீங்கள் இதுவரை கதராடைகளை வாங்காமலும் கூட இருந்திருக்கலாம், ஆனால் இந்த ஆண்டு தொடங்குங்கள். ஆகஸ்ட் மாதம் வந்தே விட்டது, இது நாடு சுதந்திரம் அடைந்த மாதம், புரட்சிக்கான மாதம். கதராடைகளை வாங்க, இதைவிடச் சிறப்பான சந்தர்ப்பம் வேறு என்ன இருக்க முடியும்? இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications