Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேகதாது அணை விவகாரம்: மத்திய அமைச்சர் கூறியது என்ன?.. செம்ம நியூஸ் சொன்ன துரைமுருகன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேகதாது அணை விவகாரம் தமிழ்நாடு-கர்நாடகம் இடையே மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் மேகதாது அணை விவகாரத்தை தேவையில்லாமல் கர்நாடக அரசு கையில் எடுத்துள்ளது.

டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியாக காவிரி நீர் இருக்கும் நிலையில் அதனை தடுத்து நிறுத்தும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று பிடிவாதமாக இருக்கிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா.

சில வாரங்களுக்கு முன்பு இதுகுறித்து நிருபர்களிடம் எடியூரப்பா கூறினார். இதனால் கோபம் அடைந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தமிழ்நாடு விவசாயிகளை பாதிக்கும் மேகதாது அணை திட்டத்தை கை விடுங்கள். இது நல்லுறவுக்கு உகந்தது அல்ல'' என்று கண்டன அறிக்கை விட்டார்.

எடியூரப்பா திட்டவட்டம்

எடியூரப்பா திட்டவட்டம்

ஆனாலும் தொடர் பிடிவாதத்தில் இருக்கும் எடியூப்பாரா '' மேகதாது அணை இரு மாநில விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும். பெங்களூரு குடிநீர் தேவைக்கு இந்த அணை மிகவும் முக்கியம். தேவைப்பட்டால் பேசி தீர்த்துக் கொள்வோம்'' என்று முதல்வர் ஸ்டாலினுக்கு லெட்டர் போட்டார்.

மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

'' மேகதாது அணை தமிழ்நாடு விவசாயிகளை கண்டிப்பாக பாதிக்கும். பெங்களூவின் சிறிதளவு குடிநீர் தேவைக்காக, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கையை அழிப்பது நியாயம் இல்லை. மேகதாது அணை கட்டக் கூடாது'' என்று பதிலுக்கு லெட்டர் போட்ட மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் எடியூபரப்பாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனத்தை பதிவு செய்தது தமிழ்நாடு அரசு.

ஒருமனதாக தீர்மானம்

ஒருமனதாக தீர்மானம்

''மேகதாது அணை கட்டியே தீருவோம்'' என்று கர்நாடகா பிடிவாதமாக இருப்பதால் தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க தொடங்கியது. விறுவிறுவென களத்தில் இறங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டக்கூடாது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

13 பேர் கொண்ட குழு

13 பேர் கொண்ட குழு

மேலும், தமிழ்நாட்டின் அனைத்து கட்சி பிரநிதிகளும் ஒன்று சேர்ந்து மத்திய ஜலசக்திதுறை அமைச்சரை சந்தித்து மேகதாது அணை விவகாரம் குறித்து முறையீடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான 13 பேர் கொண்ட அனைத்துக் கட்சி குழு டெல்லி சென்றது. அதிமுகவின் ஜெயக்குமார், மதிமுகவின் வைகோ, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பலர் இந்த குழுவில் இடம்பெறுள்ளனர்.

மத்திய அமைச்சரை சந்தித்தனர்

மத்திய அமைச்சரை சந்தித்தனர்

மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்த தமிழ்நாடு குழுவினர், கர்நாடக அரசின் அத்துமீறல் குறித்து விலாவாரியாக எடுத்துக் கூறினார்கள். மேலும் மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அமைச்சரிடம் எடுத்துக் கூறிய அவர்கள், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும் அவரிடம் வழங்கினார்கள்.

துணை போகக்கூடாது

துணை போகக்கூடாது

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எந்த வகையிலும் மத்திய அரசு துணை போகக்கூடாது. மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அமைச்சரிடம் ஒருசேர வலியுறுத்தினோம். மேகதாது அணைக்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கை முழுமையாக இல்லை.

உறுதி அளித்தார்

உறுதி அளித்தார்

காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விதித்த நிபந்தனைகளை கர்நாடகா பூர்த்தி செய்யவில்லை என்று மத்திய அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்படாது என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியாக கூறினார். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+