Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா.. தனிமைப்படுத்தப்பட்டார்

ஸ்மிருதி இராணிக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சர் ஸ்மிருதி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடிதான் உள்ளது. குறைவது போல தோன்றினாலும் கூட அதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

Union Minister Smriti Irani tests positive for corona virus

இதுகுறித்து ஸ்மிருதி போட்டுள்ள டிவீட்டில், "ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு வார்த்தைகளைத் தேடுவது என்பது என்னைப் பொறுத்தவரை அரிதானது. எனவே இந்த அறிவிப்பை சிம்பிளாக வெளியிடுகிறேன். எனக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. எனவே சமீபத்தில் என்னைத் தொடர்பு கொண்டவர்கள் எல்லாம் தங்களை பரிசோதித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.

Union Minister Smriti Irani tests positive for corona virus

இதையடுத்து அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சக அமைச்சர்களும், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பிரார்த்தித்து செய்தி அனுப்பி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+