Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உன்னாவ் பாலியல் வழக்கு! பாஜக முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் ஜாமின் ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு தண்டனையை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு, இன்று விசாரணைக்குப் வந்தது. விசாரணையில் குல்தீப் செங்காருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமினை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Supreme Court Unnao Delhi High Court

வழக்கின் பின்னணி

கடந்த 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் 17 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அப்போது பாஜகவில் இருந்த எம்எல்ஏ குல்தீப் செங்கார் சேர்க்கப்பட்டார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2019ல் இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின்படி, செங்காருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தந்தை மீது தாக்குதல்

இந்த வழக்கு நாடு முழுவதும் விவாதங்களை தூண்டியிருந்தது. ஆரம்பத்தில் பாலியல் வன்கொடுமை வழக்காகவே காவல்துறை எஃப்ஐஆரில் பதிவு செய்திருந்தது. அதில் செங்காரின் பெயர் இல்லை. செங்காரின் பெயரை சேர்க்க கோரி பல கட்ட போராட்டங்களை சிறுமியின் பெற்றோர் முன்னெடுத்திருந்தனர். மறுபுறம் இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தந்தையை, செங்காரின் சகோதரர் கடுமையாக தாக்கினார்.

தீக்குளிக்க முயற்சி

செங்காரின் சகோதரனை கைது செய்வதற்கு பதில், சிறுமியின் தந்தையை கைது செய்த உத்தரப் பிரதேச காவல்துறை, ஆயுதம் வைத்திருந்ததாக அவரை சிறையில் அடைத்தது. இவரை மீட்க கோரி சிறுமியின் தாய், முதல்வர் யோகியின் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து வழக்க நாடு முழுவதும் கவனம் பெற்றது. ஆனால் சிறையிலேயே சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இதனையடுத்து செங்காரின் சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரச்சனை இத்துடன் முடியவில்லை. தந்தை உயிரிழந்ததால் சிறுமியின் சித்தப்பா, இந்த வழக்கில் சிறுமிக்கு ஆதரவாக நின்றார். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மீது இருந்த கொலை மிரட்டல் வழக்கை தூசி தட்டிய உத்தரப் பிரதேச போலீசார், சித்தப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கார் விபத்து

மறுபுறம் இரண்டு சித்திகள் மற்றும் ஒரு வழக்கறிஞருடன் சிறுமி காரில் சென்றுக்கொண்டிருந்த போது, நம்பர் பிளேட்டில் கருப்பு மை பூசப்பட்ட லாரி ஒன்று காரின் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு சித்திகளும் உயிரிழந்தனர். சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விபத்து காயங்களிலிருந்து மெல்ல மீண்டிருக்கும் சிறுமி தற்போது இளம்பெண்ணாக வளர்ந்துள்ளார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

தண்டனை நிறுத்தி வைப்பு

இந்த வழக்கு, உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த செங்கார், தனக்கு ஜாமின் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியிருந்தார். வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியம் பிரசாத், ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தண்டனைக்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள காலம் வரை, தண்டனையை நிறுத்தி வைக்கப்படுவதாக உத்தரவிட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதிகள் சூர்ய காந்த் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகளை உள்ளடக்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. பின்னர் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,

"பொதுவாக தண்டனையை இடைநிறுத்துவது தொடர்பான உத்தரவுகளில் உச்சநீதிமன்றம் தலையிடாது. ஆனால், குற்றவாளி வேறு ஒரு குற்றத்திற்காக சிறையில் தண்டனையை அனுபவித்து வருகிறார். இது அசாதாரணமான சூழ்நிலையாக இருக்கிறது. மட்டுமல்லாது உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் சட்ட கேள்விகள் பல எழுந்திருக்கின்றன" என்று கூறி தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை ரத்து செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+