டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது என்னடா தாஜ்மகாலுக்கு வந்த சோதனை? 1 கோடி வரி பாக்கி இருப்பதாக நோட்டீஸ் விடுத்த யோகி அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: தொல்லியல் துறை கட்டுபாட்டில் இருக்கும் தாஜ்மகாலுக்கு தண்ணீர் மற்றும் சொத்து வரி பாக்கி இருப்பதாக கூறி ரூ. 1 கோடி கேட்டு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் தாஜ்மகால் உள்ளது. யமுனை நதிக்கரையில் அமைந்து இருக்கும் தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது.

முற்றிலும் பளிங்கு கற்களால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த் தாஜ்மகால் முகலாய மன்னர் ஷாஜகானால் தனது காதல் மனைவிக்கு மும்தாஜ்ஜிற்காக கட்டப்பட்டது என்பதுதான் வரலாறு.

கேரளா போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கு: திருச்சி முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேர் அதிரடி கைது! கேரளா போதைப் பொருள், ஆயுத கடத்தல் வழக்கு: திருச்சி முகாமில் இலங்கையை சேர்ந்த 9 பேர் அதிரடி கைது!

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ்மகாலுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது உண்டு. உள்நாட்டு பயணிகள் மட்டும் இன்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்தியாவுக்கு வருகை தந்தால் மறக்காமல் தாஜ்மகாலுக்கு செல்வதை பார்க்க முடியும். டெல்லிக்கு விசிட் அடிக்கும் பிற மாநில சுற்றுலாப்பயணிகள் கூட தாஜ்மகால் சென்று கிளிக் செய்து வந்தால்தான் அவர்களின் பயணம் திருப்தி அடையும்.

யோகி அரசு நோட்டீஸ்

யோகி அரசு நோட்டீஸ்

இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் தாஜ்மகாலுக்கு சொத்துவரி, தண்ணீர் வரி கட்டப்படாமல் நிலுவையில் இருப்பதாக உத்தரபிரதேசத்தின் யோகி அரசு நோட்டீஸ் விடுத்துள்ளது. தாஜ்மகாலின் 370 ஆண்டு கால வரலாற்றில் இதுபோல நோட்டீஸ் விடுப்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது. தாஜ்மகாலுக்கு மட்டும் இன்றி ஆக்ரா கோட்டைக்கும் இதேபோன்ற நோட்டீஸ் விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.1 கோடிக்கும் மேல் வரி கட்டக் கோரி

ரூ.1 கோடிக்கும் மேல் வரி கட்டக் கோரி

தாஜ்மகாலுக்கு மட்டும் சுமார் 1 கோடி ரூபாய் நிலுவைத்தொகை பாக்கி உள்ளதாக நோட்டீஸ் விடுக்கப்பட்டு உள்ளதாக ப்தொல்பொருள் கண்காணிப்பாளர் ராஜ்குமார் படேல் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சொத்துவரி மற்று தண்ணீர் வரி பாக்கி வைத்திருப்பதாக தாஜ்மகாலுக்கு 2 நோட்டீஸ்கள் விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் வரி கட்டக் கோரி தொல்லியல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

தவறுதலாக அனுப்பப்பட்டதா?

தவறுதலாக அனுப்பப்பட்டதா?

புராதன சின்னங்களுக்கு இதுபோன்ற வரிகள் பொருந்தாது. எனவே, தவறுதலாக இது அனுப்பப்பட்டு இருக்கிறது. பிற மாநிலங்களில் உள்ளது போன்ற விதிகள்தான் உத்தர பிரதேசத்திலும் உள்ளது. எனவே சொத்துவரி புராதன சின்னங்களுக்கு பொருந்தாது. தண்ணீர் வரியை பொருத்தவரை, இதற்கு முன்பாக இப்படி ஒரு கோரிக்கை வரவில்லை. வணிக நோக்கங்களுக்காக தண்ணீரை பயன்படுத்தவில்லை. தாஜ்மகால் வளாகத்தில் உள்ள புல்வெளிகளுக்கு பயன்படுத்தப்படும் நீர் பொது சேவைக்கானது. எனவே நிலுவைத்தொகைகள் எனற கேள்விக்கே இடம் இல்லை" என்றார்.

ஆக்ரோ கோட்டைக்கு 5 கோடி வரி பாக்கி

ஆக்ரோ கோட்டைக்கு 5 கோடி வரி பாக்கி

ஆக்ரா கோட்டையை பொருத்தவரை யுனேஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் பட்டியலிலும் உள்ளது. ஆக்ரோ கோட்டைக்கு 5 கோடி வரி பாக்கி இருப்பதாக கண்டோன்மெண்ட் போர்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புராதனசின்னங்களுக்கு அரசு விதி விலக்குகள் அளித்து இருப்பதை சுட்டிக்காட்டி நாங்கள் பதில் கொடுத்துள்ளோம் என்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை

விசாரணை

இதற்கிடையே, தாஜ்மகால், ஆக்ரோ கோட்டை போன்ற பாரம்பரிய இடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்ற விசாரணை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பும் பணிகயை மட்டும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், கூட தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

English summary
The Taj Mahal, which is under the control of the Department of Archaeology, claims that it owes water and property tax of Rs. It has been reported that the Uttar Pradesh government has sent a notice asking for 1 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X