நாளை முதல் UPI-யில் பணம் மாற்ற முடியாது! இந்த தவறை உடனே சரி பண்ணுங்க.. முக்கிய அறிவிப்பு
டெல்லி: யுபிஐ ஐடிகளில் சிறப்பு எழுத்துகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால் பிப்ரவரி மாதம் 1ம் தேதி (நாளை) முதல் செயல்படாது என்று என்பிசிஐ எனும் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுபிஐ பணப்பரிமாற்றத்துக்கான பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
நாம் அனைவரும் தற்போது கையில் அதிக பணம் வைத்து பயன்படுத்துவது இல்லை. இதற்கு முக்கிய காரணம் நாம் அனைவரும் யுபிஐ பணப்பரிமாற்றம் செய்வது தான். போன் பே, ஜி பே, பேடிஎம், பீம் உள்பட பல்வேறு பணப்பரிமாற்ற செயலிகளை பயன்படுத்தி வருகிறோம்.

இதனால் நம் வங்கி கணக்கில் பணம் இருந்தால் போதும். யுபிஐ செயலிகள் மூலம் நாம் எளிதாக பணப்பரிமாற்றம் செய்யலாம். இந்நிலையில் தான் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கை என்பது எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை என்பிசிஐ எனும் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வழங்கி உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே சுற்றிக்கை என்பது வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 9 ம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் , ‛‛பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் அனைத்து யுபிஐ ஐடிகளிலும் எண் மற்றும் ஆங்கில எழுத்துகள் மட்டுமே இருக்க வேண்டும். ஸ்பெஷல் கேரக்டர் குறியீடுகளான @, !, # என்பது இருக்க கூடாது. ஒருவேளை இருக்கும்பட்சத்தில் பணப்பரிமாற்றம் செய்ய முடியாது.
இந்த ஸ்பெஷல் கேரக்டர்கள் யுபிஐ ஐடியில் இருப்பின்பணப்பரிமாற்ற நடவடிக்கை என்பது ரிஜெக்ட் செய்யப்படும். இந்த நடவடிக்கை என்பது டெக்னிக்கல் ஸ்பெஷிபிகேஷன் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் செயலிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் ஒருபகுதியாக எடுக்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொருவரும் தங்களின் யுபிஐ பணப்பரிமாற்ற ஐடியில் உள்ள சிறப்பு குறியீடுகள் @, !, # இல்லாத வகையில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.
இந்த நடவடிக்கை என்ப து நாளை அமலுக்கு வர உள்ளது. இதனால் நாளைய தினம் நாட்டில் பல லட்சம் பேர் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாமல் பிரச்சனையை எதிர்கொள்ளலாம். இப்படி பிரச்சனையை எதிர்கொள்வதை தவிர்க்க ஒவ்வொருவரும் தங்களின் யுபிஐ ஐடியில் ஸ்பெஷல் கேரக்டரை நீக்கம் செய்து புதிதாக எண் மற்றும் ஆங்கில எழுத்துடன் ஐடியை உருவாக்கி கொள்ள வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications