ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்கும் விஷயம்.. வரி தொடர்பாக அமெரிக்கா எடுத்த நல்ல முடிவு
டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து உலகநாடுகளிடம் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதித்தார். இந்தியாவிற்கு 25 சதவீதமும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதித்தார். இது தொடர்பாக இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகம் என்பது மிகப்பபெரியது. பல லட்சம் கோடிக்கு மேல் வணிகம் நடக்கிறது. ஐடி, ஜவுளி, என்ஜினிரியரிங், மருந்து, கடல் உணவுகள், தோல் பொருட்கள் என பல்வேறு வகையில் ஏற்றுமதி நடந்து வருகிறது. இதற்கு பெரிய அளவில் வரிகள் கிடையாது. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின்னர், இந்தியா உள்பட பல்வேறு உலகநாடுகளிடம் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதித்தார்.

வரி விதிப்பால் சிக்கல்
இந்தியாவுக்கு 25 சதவீதமும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததற்காக கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரிவிதித்து டிரம்ப் உத்தரவிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் இது நடைமுறைக்கு வந்தது. அமெரிக்காவை பொறுத்தவரை இந்தியா தான் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இருந்துவருகிறது. இந்த வரி ஏற்றம் காரணமாக இந்திய பொருட்கள் ஏற்றுமதி அடியோடு குறைந்தது.
5ம் கட்ட பேச்சுவார்த்தை
அத்துடன் இந்தியா அமெரக்கா இடையே விவசாயம், ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட துறைகளின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்தியா மீதான அமெரிக்க வரிவிதிப்பை குறைக்க இருதரப்பு அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கான 5-ம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தநிலையில் விரைவில் இந்தியா மீதான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பியூஷ் கோயல் நம்பிக்கை
மேலும் பியூஷ் கோயல் கூறுகையில், " இந்திய அரசு அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தத்தில் நியாயமாக, சமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த வர்த்தகம் இன்று கையெழுத்தாகலாம். நாளை அல்லது அடுத்த மாதம் அல்லது அடுத்த ஆண்டு கூட... ஆனால் இந்திய அரசு எல்லாவற்றிற்கும் தயாராக உள்ளது. அமெரிக்காவின் உயர் வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட மீன்வளத்துறை உள்ளிட்டவற்றுக்கு ரஷ்யா உள்ளிட்ட மாற்று ஏற்றுமதி சந்தைகளை தேர்வு செய்துள்ளோம்" என்றார்.
இதனிடையே வரி விதிப்பு குறைப்பு குறித்து மத்திய வர்த்தக்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "அவர்கள் (அமெரிக்கா) நம்மிடம் எப்படியும் திரும்ப வரவேண்டும். இந்தியாவின் வர்த்தக பேச்சுவார்த்தைகள் மிகவும் விவரமாகவும், தெளிவாகவும் உள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதியாக நேரம் எடுக்கலாம். ஆனால் அனைத்து துறைகளின் நலன்களை கண்டிப்பாக பாதுகாக்கப்படும்" என்று கூறினார்.
இந்தியாவின் நோக்கம் என்ன
அமெரிக்கா உடனான வர்த்தகம் மூலமாக ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 489 கோடி வருவாய் இந்தியாவிற்கு கிடைக்கிறது. இதனை 2030-ம் ஆண்டுக்குள் ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 350 கோடி ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதேபோல் அமெரிக்காவும் இந்தியாவில் வர்த்தக உறவை மேம்படுத்த சில சலுகைகளை கேட்டு வருகிறது. இருதரப்பு ஒப்பந்தம் நிறைவு பெற்றால் உற்பத்தி மற்றும் விவசாயம் சார்ந்த துறை பெரும் நன்மை பெறும்.












Click it and Unblock the Notifications