நொடிக்கு நொடி ட்விஸ்ட்.. அவசர அவசரமாக அமெரிக்காவிற்கு போனை போட்ட ஜெய்சங்கர்.. நிலைமை கைமீறுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவசர அவசரமாக பேசினார். பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்கு இடையே இந்த ஆலோசனை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் அமைச்சர் ஜெய்சங்கர் அவசரமாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு போன் அடித்துள்ளார். பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல் குறித்தும், இந்தியா தரக்கூடிய பதிலடி குறித்தும், இதனால் உருவாக உள்ள போர் வாய்ப்புகள் குறித்தும் இவர்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு உள்ளனர்.

ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல்நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து வந்த 8 ஏவுகணைகளை தடுத்து எஸ்400 சுதர்சன் சக்ரா தடுப்பு அமைப்புகள் முறியடித்தது.

பாகிஸ்தானின் 8 ஏவுகணை அடுத்தடுத்து தடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் விமான தளத்தில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்துள்ளது. இதற்காக multi-layered air defence network முறை தடுப்பு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டு உள்ளது.

US Secretary Marco Rubio spoke today with Indian External Affairs Minister Subrahmanyam Jaishankar

ஜம்மு காஷ்மீரிலும், பஞ்சாப்பிலும் பாகிஸ்தான் நடத்த முயன்று இருக்கும் தாக்குதல் மிக மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த போகிறது. பாகிஸ்தான் செய்திருப்பது போரின் தொடக்கம்தான். இதற்கு கண்டிப்பாக இனி இந்தியா கடுமையான பதிலடியை தரும். நினைத்து பார்க்க முடியாத மிக மோசமான பதிலடியை தரும். இது தொடர்பாகவே அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அவசர அவசரமாக பேசி உள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடாத தாக்குதல்

முன்னதாக நேற்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தளங்களில் இந்தியா சார்பாக தாக்குதல் நடத்தப்பட்டது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். அங்கு தீவிரவாத முகாமக்கள் மட்டும் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற குறியீட்டுப் பெயரில் இரவு நேர துல்லியத் தாக்குதல்களில் மொத்தம் ஒன்பது தளங்கள் ரேடாரில் துல்லியமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டன.

இந்தியாவிற்கு உள்ளே இருந்தே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதாவது இந்தியாவில் இருந்தே ஏவுகணைகள் மூலம் 9 இடங்கள் தாக்கப்பட்டு உள்ளன. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ராணுவ பகுதிகள் எதுவும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படவில்லை.

இது போக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். பாராமுல்லா, பூஞ்ச், ரசோரி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் பலியாகினர். இதில் ஒரு பெண், 2 குழந்தைகள் அடங்குவர். மேலும் 38 பேர் காயமடைந்தனர். இதில் பூஞ்ச் மாவட்டம் தான் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இங்கு 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+