US Tariff: டிரம்புக்கு பாடம் புகட்ட முடிவு.. பதிலுக்கு பதிலாக வரி போடும் இந்தியா? சைலன்ட்டாாக நடக்கும் வேலை
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை (US Tariff 50% On India) விதித்துள்ளார். மேலும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நம்மிடம் நடத்த அமெரிக்கா மறுத்து வருகிறது. இதனால் இருநாடுகள் இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் டிரம்புக்கு பாடம் புகட்டும் வகையில் பதிலுக்கு பதில் என்ற முறையில் அமெரிக்காவின் பொருட்களை தேர்வு செய்து வரி விதிக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதில் முதற்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு இந்த மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது.

டிரம்பின் இந்த நடவடிக்கையால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டின் பொருட்கள் அமெரிக்காவில் விலை உயரும். இதனால் நம் நாட்டின் பொருட்களுக்கான விற்பனை குறையும்.
இது நம் நாட்டுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. 50 சதவீத வரிகளை விதித்த டிரம்ப் நம் நாட்டுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மறுத்துள்ளார். மேலும் ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதோடு, அமெரிக்காவுடன் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை பாதித்துள்ளது.
இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்புக்கு பதிலடி கொடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி அமெரிக்காவுக்கு போட்டியாக பதிலுக்கு பதிலாக வரி விதிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்த வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் பொருட்களில் குறிப்பிட்டவற்றை தேர்வு செய்து கூடுதல் வரிகளை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதுதொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலக வர்த்தக அமைப்பின் விதியின்படி செயல்படும் முனைப்பில் இநு்தியா இந்த நடவடிக்கையை செய்துள்ளது. அதாவது அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு மறுத்த நிலையில் டிரம்புக்கு பாடம் புகட்ட பதிலுக்கு பதில் வரி விதிக்க தேவையான நடவடிக்கையை இந்தியா தொடங்கி உள்ளது. அதன்படி அமெரிக்க வரிகளால் ஏற்படும் சேதத்திற்கு ஏற்ப சில அமெரிக்க பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அரசு சார்பில், "அமெரிக்கா ஒருதலை பட்சமாக அநியாயமாக செயல்படுகிறது. இந்தியாவின் பொருளாதார நலன்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் ஒரு தலைப்பட்சம் மற்றும் நியாயமற்ற நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது'' என்றார்.
-
நெதன்யாகுவை திட்டியது உண்மைதான்.. லெபனான் விவகாரத்தில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய டிரம்ப்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications