நாளை ஏரோ இந்தியா விமான கண்காட்சி.. முதல் முறையாக பங்கேற்கும் அமெரிக்காவின் பி-1 லான்சர் விமானம்!
டெல்லி: நாளை நடைபெறவுள்ள ஏரோ இந்தியா 2021 என்ற விமான கண்காட்சியில் அமெரிக்காவின் பி-1 லான்சர் ரக விமானமும் இந்த ஆண்டு முதல்முறையாக இடம்பெறும் என அமெரிக்க துணை தூதரக அதிகாரி டான் ஹெஃப்ளின் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏரோ இந்தியா என்ற பெயரில் விமான கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானப் படைகளின் நவீன ரக விமானங்களும் காட்சியில் இடம்பெறுவது வழக்கம்.

அந்த வகையில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளன. இந்த கண்காட்சியில் அமெரிக்காவின் பி-1 லான்சர் ரக விமானம் முதல்முறையாக இடம்பெற்றது குறித்து ஹெஃப்ளின் கூறுகையில் இந்தியாவின் விமான கண்காட்சியில் அமெரிக்காவின் விமானம் பங்கேற்பது இரு நாடுகளுக்கிடையே உள்ள நட்புறவை தெள்ளத்தெளிவாக குறிப்பிடுகிறது.
அமெரிக்கா இந்தியாவின் நம்பகமான பாதுகாப்பு கூட்டாளியாகும். இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அனைத்து நாடுகளின் செழிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்துகிறது.
இந்தியா- அமெரிக்கா இடையிலான நட்புறவு பரந்து விரிந்துள்ளன. பாதுகாப்பு துறையில் இரு நாடுகள் மிகப் பெரிய ஒத்துழைப்பை நல்குகின்றன. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ உறவை வலுப்படுத்துகிறது.
இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பின் வரம்பையும் ஆழத்தையும் அமெரிக்கா கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது. பல நிர்வாகங்களில் இது இரு நாடுகளுக்கிடையே இருக்கும் ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது என்றார் ஹெஃப்ளின் தெரிவித்தார்.
இந்த விமான கண்காட்சி பெங்களூரில் நாளை முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் இந்திய விமானப் படையின் போயிங் சினூக்ஸ், ஏச் 64 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் முதல்முறையாக பங்கேற்கின்றன.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications