காலாவதியான விசாவுடன்.. அமெரிக்காவில் தங்கியிருந்தால் இதுதான் நடக்கும்! தூதரகம் எச்சரிக்கை
டெல்லி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், விசா காலம் முடிவடைந்த பின்னரும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் எந்த மாதிரியான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் என்பதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை கவனம் பெற்றிருக்கிறது.

அதாவது, "அனுமதிக்கபட்ட நாட்களை தாண்டி நீங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்கிறீர்கள் எனில், நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொள்வீர்கள். அத்துடன், எதிர்காலத்தில் உங்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படலாம்" என்று தெரிவித்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் வெளி நாட்டினர் தங்குவதற்கு விசா வழங்கப்படுகிறது. எந்த நோக்கத்திற்காக அவர்கள் வந்திருக்கிறார்களோ, அதற்கேற்ப விசா வழங்கப்படும்.
மாணவர் விசா, வேலைக்கான விசா, சுற்றுலா விசா உள்ளிட்டவை வழங்கப்படும். இந்த விசாவில் எவ்வளவு காலத்திற்கு நீங்கள் அந்த நாட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த விசா காலத்தை தாண்டி, தங்கியிருப்பவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குறியேறுபவர்களுடன், இவர்களை அந்நாட்டு அரசாங்கம் ஒப்பிடுகிறது. சட்டவிரோதிகளை நாடு கடத்த எல்லா நாடுகளுக்கும் உரிமை இருக்கிறது.
அதன்படி, விசா காலம் முடிவடைந்தும் வெளியேறாமல் இருப்பவர்களை அமெரிக்க அரசு நாடு கடத்தி வருகிறது. சமீபத்தில் கூட அமெரிக்க ராணுவ விமானத்தில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தப்கூறுகிறது. பட்டிருந்தார்கள். பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் என அனைவருக்கும் கை விலங்கு போடப்பட்டிருந்தது. அமெரிக்க அரசு இவர்களை ஏலியன்கள் என்று குறிப்பிடுகிறது. எனவேதான் போர் கைதிகளை போல இவர்களை நடத்துகிறது.
எனவே இந்தியர்கள் இப்படி சட்டவிரோதமாக தங்கியிருந்தால் உடனடியாக தங்களது விசா காலத்தை நீட்டிக்க முயற்சிக்க வேண்டும். அல்லது நம்மூருக்கு திரும்பிவிட வேண்டும்.
வெளிநாட்டவர்கள் குறித்து அமெரிக்க அதிபர்கள் யாரும் இப்படியான கறாரான கொள்கைளை பின்பற்றியது கிடையாது. ஆனால் டிரம்ப், தான் தேர்தலில் நிற்கும்போதே, வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் நாடு கடத்தப்படுவார்கள் என்று சொல்லியிருந்தார். வெளிநாட்டவர்கள் தங்களின் வளங்களை சுரண்டுவதாகவும், எனவேதான் இப்படியான கறாரான நடவடிக்கை எடுப்பதாகவும் டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications