டிரம்ப்பை பார்த்தால் வேடிக்கையாக இருக்கு.. அமெரிக்காவை விளாசிய ஜெய்சங்கர்! கடைசியில் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முந்தைய அதிபர்கள் கடைப்பிடித்த வழிமுறையில் இருந்து விலகி உள்ளார். அவர் வேறு விதமான வெளியுறவு கொள்கையை பின்பற்றி வருகிறார். அமெரிக்கா தனது வர்த்தகத்தின் மீது கவனம் கொள்ளாமல் மற்றவர்களின் வர்த்தக்கத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சனம் செய்தார். அதேவேளையில் அமெரிக்கா - இந்தியா நட்பு இன்னும் முறியவில்லை. வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது என்று கூறி ட்விஸ்ட் கொடுத்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை தீட்டி உள்ளார். ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி இந்த வரிகளை விதித்துள்ளார். முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்த நிலையில் வரும் 27 ம்தேதி அடுத்தகட்டமாக 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது.

us-were-not-minding-their-own-business-and-were-instead-accusing-others-of-doing-business-jaishank

இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான வரியால் அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய பொருட்களின் ஏற்றுமதி சரியும் நிலை உருவாகி உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தவர்கள் மாற்று மார்க்கெட்டை தேட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதோடு டிரம்பபை விளாசி உள்ளார். அவரிடம் கேட்கப்பட்டகேள்விகளுக்கு ஜெய்சங்கர் பதிலளித்து கூறியதாவது:

டொனால்ட் டிரம்ப் உலகத்தை கையாள்வது, தனது சொந்த நாட்டை நிர்வகிப்பது உள்ளிட்ட விஷயங்களின் அமெரிக்காவின் முந்தைய அதிபர்கள் கடைப்பிடித்த வழிமுறையில் பெரிய அளவில் விலகி உள்ளார். வர்த்தகத்தை பொறுத்தவரை நம் நாட்டின் விவசாயிகளின் நலன் தான் முக்கியம். இதில் தெளிவான நிலைப்பாடு உள்ளது. யாராவது நம்முடன் வர்த்தகம் என்று வந்தால் அது நம் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையிலான வியூகத்துடன் தான் அணுகப்படும். இதற்கு உடன்படாத பட்சத்தில் மத்திய அரசு விவசாயிகளின் நலனை காப்பதில் உறுதியாக உள்ளது.

1970 ல் இருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் தொடர்பான விவகாரத்தில் மூன்றாம் நாடுகளின் தலையீட்டை நாம் ஏற்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக இதனை பின்பற்றி வருகிறோம். இப்போது நம் நாடு அந்த விஷயத்தில் ஒருமித்த கருத்துடன் உள்ளது. வணிக சார்பு நிலையை எடுக்கும் அமெரிக்க நிர்வாகம் தங்களின் சொந்த தொழிலை பற்றி கவலைப்படாமல் உள்ளது.அதேவேளையில் மற்றவர்களின் வர்த்தகம் பற்றி குற்றம்சாட்டுகிறது. இது வேடிக்கையானதாக உள்ளது.

அதோடு வெளியுறவு கொள்கையை தற்போதைய அமெரிக்க அதிபர் போல் இதற்கு முன்பு யாரும் கையாண்டது இல்லை. இந்தியாவில் இருந்து கச்சா எண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதில் சிக்கல் இருந்தால் அதை வாங்க வேண்டாம். நாம் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை. நம்மிடம் இருந்து ஐரோப்பா வாங்குகிறது. அமெரிக்கா வாங்குகிறது. எனவே பிடிக்கவில்லை என்றால் வாங்க வேண்டாம்.

இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. ஆனால் சில விஷயங்களில் நாம் ரெட் லைன் வைத்துள்ளோம். இதனால் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது. நட்பு முறிவது போல் எதுவும் இல்லை'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+