டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டிலேயே அதிக போலி ரேஷன் கார்டுகள் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம்தான்.. மத்திய அமைச்சர் தகவல்

By
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவிலேயே அதிகமான‌ போலி ரேஷன் கார்டுகள் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது, இந்தியாவில் ஒருவர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் கார்டு வைத்திருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தார். அதில் ''அஸ்வினி குமார் சவுபே எழுத்துபூரவமாக பதிலளித்தார்.

பேரவலத்தின் பிடியில் உத்தரப்பிரதேசம்.. ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியது- 223 பேர் பலிபேரவலத்தின் பிடியில் உத்தரப்பிரதேசம்.. ஒருநாள் கொரோனா பாதிப்பு 40,000-த்தை நெருங்கியது- 223 பேர் பலி

 ரேஷன் கார்டு

ரேஷன் கார்டு

'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் போலியான மற்றும் தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பொது வினியோக திட்டத்தை நடத்தும் பொறுப்பு மாநில அரசுகளையே சாரும். பயனாளிகளை அடையாளம் காண்பது, ரேஷன் கார்டு வழங்குவது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது ஆகியவையும் மாநில அரசின் பொறுப்பாகும்.

போலி

போலி

போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மாநில அரசுகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றன. அந்த வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகளில் 4 கோடியே 28 லட்சம் போலி ரேஷன் கார்டுகளை மாநில அரசுகளும், யூனியன் பிரதேச அரசுகளும் ரத்து செய்துள்ளன.

 உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசம்

போலி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டதில் தமிழகத்தில் 3.04 லட்சம் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1.7 கோடி ரேஷன் அட்டைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளன' என்று அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார். இந்தியாவிலேயே அதிக போலி ரேஷன் கார்டுகள் உள்ள மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.

 ஒரே கார்டு

ஒரே கார்டு

இந்தியாவில் இடம்பெரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங் களில் உள்ள ரேஷன் கடைகளில், அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்க, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி உள்ளது. இதனால் பல போலியான ரேஷன் கார்டுகள் அதிகரித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Uttar Pradesh tops list of states with highest number of fake ration cards in India
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X