மார்ப் செய்த புகைப்படம்.. உத்தரகாண்ட் பாஜக மீது தேர்தல் விதிமீறல் புகார்.. தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உத்தரகாண்ட் பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா என ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து செய்துவருகிறது.
அதேபோல், 5 மாநில தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 -ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ்
உத்தரகாண்டில் தேர்தல் வேலைகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக உத்தரகாண்ட் பாஜகவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்கெ வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஹரீஷ் ராவத்
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான ஹரீஷ் ராவத் படத்தை தவறாக மார்ப் செய்து, தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது உத்தரகாண்ட் மாநில பாஜக. அதில் ஹரீஷ் ராவத்தை ஒரு மதத்தின் அடையாளமாக தவறாக சித்தரித்து பதிவு செய்திருந்தனர். இது இணையம் முழுக்க வைரலானது. காங்கிரஸ் கட்சியின் பலர் இந்த போஸ்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்கள்.

புகார்
இதையடுத்து, உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியினர் இந்த ட்வீட் விவகாரத்தை தேர்தல் ஆணையம் வரை கொண்டு சென்றுள்ளனர். கடந்த பிப்ரவரி 3ம் தேதி இரவு 9.34 மணிக்கு ஹரீஷ் ராவத் புகைப்படத்தை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மதத்தினர் புண்படும்படி பதிவிட்டிருக்கிறார்கள். இது தவறு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்திருக்கிறார்கள்.
Recommended Video

எப்.ஐ.ஆர்
காங்கிரஸ் தலைவர் ரணதீப் சூரிவாலா இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருக்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகளை பாஜக மீறியதற்காக அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதியப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, உத்தரகாண்ட் பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications