பரபரப்பு பேட்டி.. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை.. இந்திய மருத்துவ நிபுணர் அதிரடி
குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவையில்லை என்று மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்
டெல்லி: கொரோனா வைரஸ் பரவல் இப்போதைக்கு முடிவுக்கு வரக்கூடிய ஒரு விஷயமில்லை.. அதனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி அவசியமில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஆனால், முழுமையாக குறையவில்லை.. உலக அளவில் கொரோன வைரஸ் பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் தொடர்ந்து வந்தநிலையில், இப்போது, 7-வது இடத்துக்கு வந்துள்ளது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு 18,359 ஆக உயர்ந்துள்ளது.. அதேசமயம், கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 160 ஆக குறைந்துள்ளது... 1,78,098 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்..

தடுப்பூசி
இன்று இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் எண்ணிக்கை 99 சதவீதத்தை எட்டிவிட்டது.. விரைவில் 100 கோடியை எட்ட போகிறது.. இதுவரை 75% பேர் கொரோனா தடுப்பூசி முதல் டோஸையும் 31% பேர் கொரோனா தடுப்பூசி 2-வது டோஸையும் போட்டுள்ளனர்... 2வது அலை பரவல் வந்துபோனதில் இருந்தே, தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்..

ஆலோசனை
அந்த அளவுக்கு தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன... 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனையும் முன்பு நடந்து வந்தது.. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரக வல்லுனர் குழு பரிந்துரை செய்திருந்தும், அது தொடர்பாக இதுவரை இன்னும் இறுதி முடிவு வெளியாகவில்லை..

பேட்டி
இப்படிப்பட்ட சூலில்தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தொற்றுநோயியல் துறை தலைவரான டாக்டர் சமிரன் பாண்டா ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத்தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.. செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் தந்த பேட்டியில் சொல்லி உள்ளதாவது: "தொற்றினால் பாதிக்கப்படக்கூடிய பெரியவர்களுக்குதான் தடுப்பூசி போட வேண்டும்.. அதற்குதான் முன்னுரிமை தர வேண்டும்..

வழிகாட்டு நெறிமுறை
குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதால் கொரோனா வைரஸ் பரவல் எந்தவித முடிவுக்கும் வந்து விடாது... கொரோனா வைரஸ் பரவலுக்கு குழந்தைகள் காரணமாக மாட்டார்கள்.. கொரோனா தொற்றை குழந்தைகள் பரப்பவில்லை... மிக குறைந்த அளவில்தான் குழந்தைகளுக்கான தொற்று பாதிப்பு ஏற்படுகிறது என்பது பல ஆய்வுகளில் நமக்கு தெரிய வருகிறது..

இணைநோய்
அதனால் பெரியவர்களுக்குத்தான் தடுப்பூசி தேவை.. அத்துடன், கொரோனா கால கட்டுப்பாட்டு வழிகாட்டும் நெறிமுறைகளை பெரியவர்கள்தான் கடைப்பிடிக்க வேண்டும்.. அதிலும் குறிப்பாக, முதியவர்கள், இணை நோய் உடையவர்கள்தான் 2 டோஸையும் செலுத்தி கொள்ள வேண்டும்.. அதேசமயம், குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் தருவது என்பது ஒழுங்குமுறை சம்பந்தப்பட்ட முடிவாகும்.." என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications