டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை!
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அண்ணா, காமராஜர் மற்றும் முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு ராஜ்யசா எம்.பி. வைகோ மரியாதை செலுத்தினார்.
23 ஆண்டுகளுக்கு பின்னர் ராஜ்யசபா எம்.பி.யாக வைகோ இன்று டெல்லி சென்றார். டெல்லி செல்வதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்தியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது என்றார்.
மேலும் நான் சட்ட நகலை எரித்து சிறை சென்று இருக்கிறேன். பொடா சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். தற்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் எம்.பி.யாக டெல்லி செல்கிறேன் என நினைவுகூர்ந்தார்.

டெல்லியில் வரவேற்பு
டெல்லி விமான நிலையத்தில் வைகோவுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மதிமுக நிர்வாகிகள் மற்றும் தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் வைகோவுக்கு வரவேற்பளித்தனர்.

அண்ணா சிலை பாதம் தொட்டு
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு வைகோ சென்றார். அங்கு லோக்சபா நுழைவாயிலில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையின் முன்பாக மண்டியிட்டு சிலையின் பாதம் தொட்டு வணங்கினார் வைகோ.

தேவர் சிலைக்கு மரியாதை
மேலும் லோக்சபா நுழைவாயிலில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும் வைகோ மரியாதை செலுத்தினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கும் வைகோ மரியாதை செலுத்தினார்.

வைகோவுக்கு சு.சுவாமி வாழ்த்து
முன்னதாக வைகோவை நாடாளுமன்ற வளாகத்தில் பார்த்த பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். சுப்பிரமணியன் சுவாமி இதை தமது ட்விட்டர் பக்கத்தில் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications