ஆளுநர் ரவியை டிஸ்மிஸ் செய்க! 57 எம்.பிக்கள், 50 லட்சம் பேர் கையெழுத்து- ஜனாதிபதியிடம் வைகோ மனு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய கோரி 57 எம்.பிக்கள், 50 லட்சம் பொதுமக்கள் கையெழுத்திட்ட மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழங்குகிறார்.

மதிமுகவின் 29-வது பொதுக் குழுவில் தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரும் கையெழுத்து இயக்கம் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த கையெழுத்து இயக்கத்தை கடந்த ஜூன் 20-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த கையெழுத்து இயக்கத்தில் முதலில் மூத்த இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு கையெழுத்திட்டார்.

Vaiko to submit signature petitions against Tamil Nadu RN Ravi to President Droupadi Murmu today

நாகாலாந்து போல கிளர்ச்சி: அப்போது பேசிய வைகோ, தமிழ்நாட்டு நலனுக்கும் அரசியல் சாசனத்துக்கும் முதல் விரோதி தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி. நாகலாந்து மக்களைப் போல தமிழ்நாட்டு மக்களும் கிளர்ந்து எழ வேண்டும். இதற்காகவே கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம் என கூறியிருந்தார்.

50 லட்சம் பேர் கையெழுத்து: இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் மதிமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்த மனுவில் மொத்தம் 57 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் என சுமார் 50 லட்சம் பேர் இம்மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

துரை வைகோ: மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னின்று நடத்தினார். இது தொடர்பாக துரை வைகோ கூறுகையில், தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நிறைவேற்றிய சட்டசபை தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். ஆகையால் அவரை நீக்க கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம் என்றார்.

ஜனாதிபதியிடம் ஒப்படைப்பு: தற்போது இந்த கையெழுத்து இயக்கம் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வைகோ எம்.பி இந்த கையெழுத்து மனுக்களை ஒப்படைக்கிறார்.

டெல்லியில் வைகோ: இது தொடர்பாக டெல்லியில் வைகோ இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. அரசியல் உள்நோக்கத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவி. செயல்பட்டு வருவதால்தான் அவரை நீக்க வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தினோம். இந்த கையெழுத்து மனுக்களை இன்று ஜனாதிபதியிடம் நாங்கள் கொடுக்க இருக்கிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+