VB–G RAM G: 100 நாள் வேலை உறுதி திட்டம் ரத்து! மத்திய அரசின் புதிய திட்டத்தால் என்னென்ன பயன்கள்?
டெல்லி: 100 நாள் வேலை உறுதி திட்டம் நீக்கப்பட்டு விட்டு விகாசித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் (VB-G RAM G) என மத்திய அரசு கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு வேறு பெயரை வைத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த புதிய திட்டம், பழைய 100 நாள் திட்டத்தில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதை காணலாம்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் (MGNREGA) விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதற்குப் பதிலாக, மத்திய அரசு 2025-ல் மக்களவையில் "விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) உத்தரவாதம்" (VB-G RAM G) என்ற புதிய மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த புதிய திட்டம், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை ரத்து செய்து, வேலைவாய்ப்புக்கான புதிய விதிகளை அமல்படுத்தும் என சொல்லப்படுகிறது.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம், "விக்சித் பாரத் 2047" என்ற தேசிய தொலைநோக்கு பார்வையுடன் ஊரக வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டை இணைப்பதாகும். இது வளமான இந்தியாவை உருவாக்குவதற்கான மத்திய அரசின் லட்சியத் திட்டம் என சொல்லப்படுகிறது. MGNREGA திட்டத்தை முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட ஒரு புதிய கட்டமைப்பால் மாற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்ததாவது: "கிராமப்புறத்தில் உள்ளவர்களுக்கு 125 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இந்த சட்டம், வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், நீடித்த ஊரக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிட்ட நான்கு முக்கியப் பிரிவுகளின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
அவை: நீர் பாதுகாப்பு தொடர்பான பணிகள், இதன் மூலம் நீர்வளம் பெருகும். கிராமப்புற அடிப்படை உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம் தொடர்பான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கத்தைக் குறைப்பதற்கான சிறப்புப் பணிகள் ஆகியனவாகும்.
இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் அனைத்து பணிகளும் "விக்சித் பாரத் தேசிய ஊரக உள்கட்டமைப்பு தளம்" (Viksit Bharat National Rural Infrastructure Stack) என பெயரிடப்படும். இந்த புதிய சட்டம், MGNREGA-வை விட ஒரு மேம்படுத்தப்பட்ட திட்டமாக அமையும் என்கிறார்கள்.
புதிய சட்டத்தில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஊரக குடும்பங்களுக்கு அதிக வருமானத்தை அளிக்கிறது. மேலும், முன்பு சிதறியிருந்த பணிகள் இன்றி, ஒரு உள்கட்டமைப்பு மீது இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய சட்டம், உள்ளூர் அளவிலான, ஒருங்கிணைந்த திட்டமிடலை வலியுறுத்துகிறது. கிராம பஞ்சாயத்துகளால் உருவாக்கப்படும் "விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள்," மத்திய அரசின் PM கதி-சக்தி போன்ற தேசிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இது நீர் பாதுகாப்பு, அடிப்படை ஊரக உள்கட்டமைப்பு, வாழ்வாதாரம், காலநிலை மாற்றம் ஆகியவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
இந்த சட்டம், நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் , அதிக வருமானத்தை தந்து கிராமப்புற பொருளாதாரத்தை பலப்படுத்துகிறது. குறிப்பாக, நீர் தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
- உதாரணமாக, மிஷன் அம்ரித் சரோவர் (Mission Amrit Sarovar) ஏற்கனவே 68,000க்கும் மேற்பட்ட நீர்நிலைகளை புதுப்பித்துள்ளது. இது விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மைக்கு உதவுகிரது.
- அத்தியாவசிய ஊரக உள்கட்டமைப்புகளான சாலைகள், கிராமப்புற வணிகச் செயல்பாடுகளையும் அதிகரிக்கும்.
- 125 நாட்கள் வேலை, குடும்ப வருவாயை கணிசமாக அதிகரித்து, கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும். வேலைத் தேடி வேறு மாநிலங்களுக்கோ மாவட்டங்களுக்கோ செல்வது அவசியமில்லாமல் போகும்.
- இந்த திட்டத்தில் டிஜிட்டல் முறையில் வருகைப் பதிவு இருக்கும் என்பதால் பணப்பரிமாற்றம் செய்யும் போது வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். ஊழலை தடுக்கும்.
- 100 நாள் வேலை திட்டத்திற்கு செல்வதால் விவசாய வேலைக்கு ஆட்கள் இன்றி விவசாயிகள் தவிக்கிறார்கள். இந்த புதிய திட்டத்தின் மூலம் அறுவடை காலங்களில் ஊரக வேலை உறுதி திட்டத்தை 60 நாட்கள் நிறுத்திவிட்டால் விவசாய பணிகளுக்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்படாது.
- உணவு உற்பத்திச் செலவுகளை அதிகரிக்கும் தேவையற்ற கூலி உயர்வைத் தடுக்கவும் உதவும்.
- பயிர்களைப் பாதுகாத்து சேதங்களைக் குறைக்கும்.
- 125 நாட்கள் உறுதி செய்யப்பட்ட வேலை 25% அதிக சாத்தியமான வருவாயை அளிக்கும். "விக்சித் கிராம பஞ்சாயத்து திட்டங்கள்" (Viksit Gram Panchayat Plans) மூலம் உள்ளூர் அளவில் திட்டமிடப்பட்ட முன்னரே கண்டறியப்பட்ட வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
- வேலை வழங்கப்படாவிட்டால் மாநிலங்கள் கட்டாயம் வேலையின்மைக்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். மேம்படுத்தப்பட்ட சாலைகள், நீர் வசதிகளை உருவாக்குவதன் மூலம் தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள்.
100 நாள் வேலை திட்டமானது 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள கிராமங்கள் மாறிவிட்டன.
கடந்த 2011 - 2012 ஆம் ஆண்டு 25.7 சதவீதமாக இருந்த வறுமைக் கோடு, 2023- 2024 ஆம் ஆண்டில் 4.86 சதவீதமாக குறைந்துள்ளது.
பழைய 100 நாள் திட்டத்தால் தற்போதைய கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications