பாஜக நிறுத்தும் ஜனாதிபதி வேட்பாளரை எந்த சூழலிலும் ஆதரிக்க முடியாது.. அவர் வெல்ல கூடாது! திருமாவளவன்
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், இது தொடர்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 14ஆவது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் உள்ளார். அவரது பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில், புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய ஜூலை 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம். இருந்த போதிலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தி அழுத்தம் கொடுக்க விரும்புகிறது. இதற்காக முதலில் சரத் பவார், ஃபாருக் அப்துல்லா, கோபல் காந்தி ஆகியோரின் பெயர்கள் பரீசிலனை செய்யப்பட்டது. இறுதியில் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்கா எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது.
Recommended Video

திருமாவளவன்
இது தொடர்பாக நேற்று சரத் பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, "நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நாட்டில் இருக்கும் அனைத்து கட்சிகளின் ஆதரவும் தேவை.. போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

வெல்லக் கூடாது
யஷ்வந்த் சின்கா இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் இந்த தேசத்தையும் அரசியலமைப்பு சட்டத்தையும் பாதுகாப்பார் என்ற நம்பிக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உள்ளது. பாஜக நிறுத்தும் வேட்பாளரை எந்த சூழலிலும் ஆதரிக்க முடியாது. பாஜக வேட்பாளர் வெற்றி பெறக் கூடாது. அந்த வகையில் தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை முன்மொழிந்துள்ளோம். இவர் வெற்றி பெறுவது நாட்டிற்கே நல்லது" என்றார்.

பாஜக
நேற்று மாலை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், இரவு பாஜக கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதன்படி குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக இருந்த இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications