Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரொம்ப சீரியஸ்.. சென்னை வெள்ளத்திற்கு ரூ.5000 கோடி நிவாரணம் அளிக்க விசிக எம்.பி லோக்சபாவில் நோட்டீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சென்னை வெள்ளப் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5000 கோடி வழங்க வலியுறுத்தி விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 2, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் 'மிக்ஜாம்' புயல் காரணமாக பெய்த வரலாறு காணாத பெருமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிகமான மழைப்பொழிவு பெறப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாலைகள், பாலங்கள், பொது கட்டடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

VCK MP notice in parliament seeks interim relief of 5000 crore for chennai flood

இந்நிலையில், வெள்ள நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சென்னை பெருமழை வெள்ள சேதம், மீட்பு பணிகள் பற்றி விளக்கமாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடியினை உடனடியாக வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், விசிக எம்.பி ரவிக்குமார், தமிழக முதல்வர் கோரிய நிவாரண தொகையை வழங்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

மிக்ஜாம் சூறாவளியின் தாக்கத்தால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையை ஒட்டி சூறாவளி நிலையாக மையம் கொண்டதால் நிலைமை மோசமானது. இரண்டு நாட்களாக இடைவிடாத மழை பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக சென்னையில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்னையில் சாலைகள் மற்றும் வடிகால் அமைப்புகளில் பெருமளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை ஒன்பது உயிர்கள் பலியாகியுள்ளன, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மக்கள் உயரடுக்குக் கட்டடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தெருக்களும், அடுக்குமாடிக் குடியிருப்புகளும் இயற்கைப் பேரழிவிற்கு சாட்சியாக நிற்கின்றன. வீடுகளிலும், வீதிகளிலும் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் வாகனங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்துள்ளன. ராணுவ வீரர்களும், என்டிஆர்எப் வீரர்களும் படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே, 11 லட்சம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், 9 மாவட்டங்களில் 61,666 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். பால் பாக்கெட்டுகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.5000 கோடி ரூபாய் வழங்குமாறு மத்திய அரசிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த நிவாரணத்தை உடனடியாக வழங்குமாறும், பேரிடர் குறித்த முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள ஏதுவாக மத்திய குழுவை உடனடியாக சென்னைக்கு அனுப்புமாறும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விசிக எம்.பி ரவிக்குமார் தாக்கல் செய்துள்ள கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+