டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழைய வாகனங்களை அகற்றிவிட்டு புதிய வாகனங்கள் வாங்கும் கொள்கைக்கு நிதின் கட்கரி வரவேற்பு

Google Oneindia Tamil News

டெல்லி: பழைய வாகனங்களை அகற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்கும் கொள்கையால் காற்று மாசு குறையும் ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சி பெறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்றைய தினம் தாக்கலானது. இந்த பட்ஜெட்டில் வாகன அகற்ற கொள்கை என்பது அறிமுகம் செய்யப்பட்டது. 20 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் பயணிக்க ஏதுவானதா என 6 மாதங்களுக்கு ஒரு முறை சோதனை செய்து சரிபார்த்தல் ஆகும்.

Vehicle Scrapping policy will reduce pollution, says Nitin Gadkari

இந்த சட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அனுமதி அளித்தார். இதன் மூலம் மிகவும் பழைய வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறையும். இது போல் பழைய வர்த்தக பயன்பாட்டு வாகனங்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை தகுதி சான்றிதழ் பெறுவதற்கு பதிலாக புதிய வாகனத்தையே வாங்க மக்களை தூண்டும்.

இதனால் காற்று மாசு குறைவதோடு வாகன விற்பனைகள் உயர்ந்து ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பாதையில் செல்லும். இதன் மூலம் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆட்டோமொபைல் துறையை மீட்பது ஆகும்.

தமிழகத்தில் கடற்பாசி பூங்கா, ரூ.16.5 லட்சம் கோடி கடன்... பட்ஜெட்டில் விவசாய துறைக்கான அறிவிப்புகள்!தமிழகத்தில் கடற்பாசி பூங்கா, ரூ.16.5 லட்சம் கோடி கடன்... பட்ஜெட்டில் விவசாய துறைக்கான அறிவிப்புகள்!

இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்கும் கொள்கை ஆட்டோமொபைல் துறைக்கு லாபத்தை கொடுக்கும். காற்று மாசையும் கட்டுப்படுத்தும்.

கார், பேருந்துகள், லாரிகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் சர்வதேச சந்தைகளில் இந்திய ஆட்டோமொபைல் துறையின் போட்டி அதிகரிக்கும். ஏற்றுமதி அதிகரிக்கும், இறக்குமதி குறையும்.

வருங்காலத்தில் கார்கள், பேருந்துகள், லாரிகள் ஆகியவற்றை அதிகமாக தயாரிக்கும் மையமாக இந்தியா விளங்கும். அதிலும் அனைத்து எரிப்பொருள்கள், எத்தனால், மெத்தனால், பயோ சிஎன்ஜி, எல் என் ஜி உள்ளிட்டவற்றை கொண்டு தயாரிக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்றார்.

English summary
Union Minister Nitin Gadkari says that Vehicle Scrappin policy will reduce pollution, and it will give development for auto sector.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X