குஜராத் வன்முறை-அன்றைய மோடி அரசு என்னவெல்லாம் செய்தது? உச்சநீதிமன்றத்தில் பட்டியல் போட்ட கபில் சிபல்
டெல்லி: 2002-ம் ஆண்டு குஜராத் வன்முறை சம்பவங்களின் போது அன்றைய முதல்வராக இருந்த மோடி அரசு எப்படி எல்லாம் வன்முறையாளர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டது என்கிற விவரங்களை உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபிசிபல் பட்டியலிட்டார்.
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002-ம் ஆண்டு சபர்மதி ரயிலுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்தது. இந்த தீ வைப்பு சம்பவத்தில் அயோத்தியில் இருந்து திரும்பி கொண்டிருந்த சாமியார்கள் உட்பட 57 பேர் கருகி உயிரிழந்தனர்.
இதனையடுத்து குஜராத் முழுவதும் மிகப் பெரிய அளவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இந்த வன்முறை சம்பவத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் நிகழ்ந்த மிக மோசமான மதம் சார்ந்த வன்முறை சம்பவம் இது. அப்போது குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் மோடி, குஜராத் உள்துறை அமைச்சராக தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இருந்தனர்.

மோடி விடுவிப்பு
அப்போது, குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாஃப்ரியும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வன்முறை சம்பவங்களில் மோடி, அமித்ஷாவுக்கு தொடர்பிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு ஒன்று ஆர்கே ராகவன் தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு விசாரணை குழு, குஜராத் முதல்வராக இருந்த மோடி மற்றும் குற்றம்சாட்டப்பட்ட 59 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் எதுவும் இல்லை என 2012-ல் கூறியது.

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
இந்த சிறப்பு விசாரணை குழுவின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக் கோரி படுகொலை செய்யப்பட்ட காங். எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா, குஜராத் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார். அலகாபாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் இந்த மனுக்களை தள்ளுபடி செய்தன. இதனைத் தொடர்ந்து ஜாகியா ஜாப்ரி உச்சநீதிமன்றத்தில் 2018-ல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். ஜாகியா ஜாஃப்ரியின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதாடி வருகிறார். இவ்வழக்கு விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கபில் சிபல் வாதம்
உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று ஏ.எம்.கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நடந்த விசாரணையின் போது கபில் சிபில் முன்வைத்த வாதங்கள்: குஜராத் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெஹல்கா இதழ் ஸ்டிங் ஆபரேசன் நடத்தியது. அதில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதியன்றே பஜ்ரங் தள், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகளின் நிர்வாகிகள் ஆயுதங்கள், பெட்ரோல்-டீசல் வெடிகுண்டுகளை தயார் செய்தது உறுதி செய்யப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்தும் வெடிபொருட்களை வாங்கி குவித்தனர். அகமதாபாத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நிர்வாகிக்கு சொந்தமான குவாரியில் இருந்து டைனமட் வெடிகுண்டுகள் தயாரித்து கொண்டுவரப்பட்டன. இந்த கோணங்களை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கவே இல்லை.

சிறப்பு விசாரணை குழு பாரபட்சம்
ரயில் எரிப்பு சம்பவம் நிகழ்ந்த உடனேயே கோத்ராவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அகமதாபாத்தில் 12 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. அன்று காலையிலேயே பல்லாயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் அகமதாபாத்தில் ஒன்று திரண்டனர். அவர்களுக்கு தகவல் கொடுத்தது யார்? எப்படி அவர்கள் ஒன்று திரண்டார்கள்? கோத்ராவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உடனேயே அகமதாபாத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். டெஹல்கா புலனாய்வு விசாரணையில் சுட்டிக்காட்டப்பட்ட நபர்களின் தொலைபேசிகளை சிறப்பு புலனாய்வுக் குழு கைப்பற்றவில்லை. அது குறித்து ஆராயவும் இல்லை. இத்தனைக்கும் இந்த புலனாய்வு விசாரணை டேப்களை ஆதாரமாகக் கொள்ளலாம் என குஜராத் உயர்நீதிமன்றமும் கூறியிருந்தது.

தூதர் பதவி கொடுத்த மத்திய அரசு
இந்த சிறப்பு புலனாய்வுக் குழுதான் மோடி உள்ளிட்டோரை குற்றமற்றவர்கள் என கூறி விடுதலை செய்தது. இந்த சிறப்பு விசாரணை குழுவின் தலைவராக இருந்த ஆர்.கே.ராகவன், 2017-ல் சைப்ரஸ் நாட்டின் தூதராகவும் நியமிக்கப்பட்டார். குல்பர்க்கா சொசைட்டி பகுதியில் 68 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்ட அகமதாபாத் போலீஸ் கமிஷனராக இருந்த பி.சி. பாண்டே, பின்னாளில் குஜராத் டிஜிபியாக பதவி உயர்வும் பெற்றார். மேலும் 2002-ம் ஆண்டு ஒரு பக்கம் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தினர் தொடர்பான வழக்குகளில் அதே இயக்கத்தைச் சேர்ந்தவர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டும் இருந்தனர் (அப்போது குஜராத் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி). அதனால் குஜராத் வன்முறை வழக்கு சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் எளிதாக பெற்றனர். அவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது அரசு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் 59 பேர் ஜாமீன் பெற்று விடுதலையாகினர்.

மாயா கோடானி விடுதலையை எதிர்க்கவில்லையே?
2002-ம் ஆண்டு நரோடியா பாட்டிபா படுகொலை வழக்கில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. மாயா கோடானியை குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் அறிவித்தது. மாயா கோடானிக்கு எதிராக 11 பேர் நேரடி சாட்சிகளாக வாக்குமூலம் அளித்தனர். இதனால் மாயா கோடானி உட்பட 32 பேருக்கு 2012-ல் 28 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் மாயா கோடானி உள்ளிட்டோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 2014-ம் ஆண்டு குஜராத் நீதிமன்றம் மாயா கோடானிக்கு ஜாமீன் கொடுத்து அவரது தண்டனையை நிறுத்தி வைத்தது. பின்னர் 2018-ல் மாயா கோடானியை வழக்கில் இருந்தே குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. ஆனால் இதனை எதிர்த்து சிறப்பு புலனாய்வுக் குழு மேல்முறையீடும் செய்யவில்லை. இவ்வாறு கபில் சிபல் வாதாடினார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications