"தரதரவென இழுத்து.." சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கைது.. டெல்லி போராட்டத்தில் குழப்பம்
டெல்லி: மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர். வீராங்கனைகள் கைது செய்யப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக உள்ளவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். உத்தரப் பிரதேச பாஜக எம்பியாகவும் உள்ள இவர், இந்திய மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

முதலில் கடந்த ஜனவரி மாதமே இந்த குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்போதே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக், போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.
விசாரணைக் குழு: அப்போது மேரி கோம் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இருப்பினும், விசாரணைக் குழு அமைக்கப்பட்ட பின்னரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதைக் கண்டித்து இம்மாத தொடக்கத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் இறங்கியுள்ளனர். அப்போது மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் விவசாயிகளும் இணைந்தனர்.
போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னரும் வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் பின்னரே பிரிஜ் பூஷன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில், அங்கே போராட்டம் நடத்தப் போவதாக மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்தனர்.
கைது: இதையடுத்து பாதுகாப்பு கருதி டெல்லி எல்லைகளை போலீசார் மூடினர். இதை மீறி போராட்டம் நடத்த முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கே மிக பெரிய குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டது. வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்கிற்கு எதிராகப் போராடி வரும் இவர்கள், மஹிளா மகாபஞ்சாயத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஜந்தர் மந்தரில், போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும், போராட்டத்தை நடத்துவதில் மல்யுத்த வீரர்கள் உறுதியாக இருந்தனர்.
வினேஷ் போகத் மற்றும் அவரது சகோதரி சங்கீதா போகத் தலைமையிலான மல்யுத்த வீரர்கள் தடைகளைத் தாண்டி செல்ல முயன்ற நிலையில், பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.
This is how our champions are being treated. The world is watching us! #WrestlersProtest pic.twitter.com/rjrZvgAlSO
— Sakshee Malikkh (@SakshiMalik) May 28, 2023
அவர்கள் வலுக்கட்டாயமாகப் பேருந்தில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து போராட்டத் தளத்தில் போடப்பட்டிருந்த குடிசை உள்ளிட்டவற்றை போலீசார் அகற்றினர். சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோவால் பரபரப்பு: இதற்கிடையே போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகளைக் கைது செய்த போது நடந்த குழப்பம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை போலீசார் சுற்றி வளைத்து இழுத்துச் செல்லும் நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 30 வயதான சாக்ஷி மாலிக்கை பெண் போலீசார் இழுத்துச் செல்வதும் பஜ்ரங் புனியா அவரை காப்பாற்ற முயல்வதும் பதிவாகியுள்ளது.
தான் வலுக்கட்டமாயக இழுத்துச் செல்லப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். டெல்லி போலீசாரின் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து. தனது உரிமைக்காகப் போராடும் பெண்ணை இப்படித்தான் நடத்துவார்களா என போலீசாரை சாடி வருகின்றனர். மேலும், நாட்டிற்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைகளை இப்படி நடத்துவது தவறானது என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
She is Sakshi Malik, Padma Shri & Olympic medal winner for India.
— Dr Nimo Yadav (@niiravmodi) May 28, 2023
She is protesting for justice for women wrestlers at jantar Mantar against BJP MP Brijbhushan singh
She wanted to go to New Parliament House as their alleged harasser Brijbhushan was at the inauguration function… pic.twitter.com/562wdp9abJ
மேலும், சாக்ஷி மாலிக் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளைத் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார்கள். நமது நாட்டின் சாம்பியன்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை உலகம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்று சாக்ஷி மாலிக் இந்த வீடியோவை பகிர்ந்து சாக்ஷி மாலிக் பதிவிட்டுள்ளார்.
-
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
Periasamy Kumaran: இங்கிலாந்திற்கான இந்தியாவின் புதிய தூதராக பெரியசாமி குமரன் நியமனம்! யார் தெரியுமா இவர்? -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications