ஒற்றை போட்டோ 642.7k லைக்.. டுவிட்டரில் மாஸ் காட்டிய கோலி-அனுஷ்கா ஜோடி !
புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்காசர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை பதிவிட்டு தான் மற்றும் அனுஷ்கா சர்மா புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த போட்டோ 2020 ல் அதிகம் பேர்(642.7k லைக்) லைக் செய்த புகைப்படமாக உள்ளது.
இதேபோல் நடிகர் விஜய் வெளியிட்ட டுவிட்டுக்கு அதிகம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர். மேலும், அதிக பேர் கருத்து, மேற்கோள் காட்டிய ட்டுவிட்டாக நடிகர் அமிதாப்பச்சன் வெளியிட்ட டுவிட் உள்ளது

மோசமான வருடம்
நல்ல தொடக்கம் கண்ட 2020 ம் ஆண்டு, மிக மோசமான, கசப்பான அனுபவங்களை மக்களுக்கு தந்து விட்டு விடைபெறுகிறது. இதற்கு முன் எத்தனையோ ஆண்டுகள் மக்களுக்கு வேப்பங்காய் போல் கசந்து இருந்தாலும், இந்த ஆண்டு நம் மனதில் இருந்து அவ்வளவு சீக்கிரம் அகலாது. இதற்கு காரணம் என்னவென்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

கொரோனா அரக்கன்
புயல், வெள்ளம், விபத்துகள் வந்தால் கூட அது சார்ந்த பகுதிக்குத்தான் அழிவு இருக்கும். ஆனால் கொரோனா என்னும் கொடிய மிருகம் மக்களின் உடல்நிலை பாதிப்பு, வாழ்வாதாரம் அழிப்பு என பாரபட்சமில்லாமல் அனைத்தயும் பாதித்து விட்டு சென்று இருக்கிறது. அதனால்தான் இது மற்ற ஆண்டுகளை விட மிக கொடிய ஆண்டு.

டுவிட்டரில் ஆதிக்கம்
இந்த வருடம் ஏறக்குறைய பெரும்பாலான நாட்கள் மக்கள் வீட்டில் இருந்ததால் செல்போன், டி.வி ஆகியவற்றுடன் அவர்கள் வாழ்க்கை கழிந்தது. இதனால் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் முழுவதும் மக்களால் ஆக்கிரமிக்கபட்டு இருந்தது. மகிழ்ச்சி, துன்பம் ஆகியவற்றில் நெட்டிசன்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தினார்கள். அரசியல், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் வெளியிடும் கருத்துக்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து சேர்த்தன.

கோலி-அனுஷ்கா தம்பதி
அந்த வகையில் டுவிட்டரில் இந்த ஆண்டு அதிகம் ஆதிக்கம் செலுத்திய கருத்துக்கள், புகைப்படங்களை அந்த நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி டுவிட்டரில் இந்த ஆண்டு அதிக மக்களால் கவர்ந்து இழுக்கபட்ட நபராக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்காசர்மா உள்ளனர்.

லைக் செய்தனர்
அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதால், அவருடன் தான் இருக்கும் போட்டோவை ஆகஸ்டில் வெளியிட்ட விராட் கோலி அந்த செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். இதனால் அந்த தம்பதிக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. விராட் கோலி வெளியிட்ட அந்த ட்வீட்க்கு 642.7k பேர் விருப்பம்(லைக்) செய்துள்ளனர். இதுதான் இந்த ஆண்டில் அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட ட்வீட் என டுவிட்டர் தெரிவித்து உள்ளது.

விஜய் மாஸ்
இதேபோல் நடிகர் விஜய் வெளியிட்ட டுவிட்டுக்கு அதிகம் பேர் ரீடுவிட் செய்துள்ளனர். நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது. அப்போது அவரை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பிப்ரவரி 10ம் தேதி அங்கு இருந்த வாகனம்மீது ஏறிய விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டார். அதனை டுவிட்டரில் வெளியிட்டார். இதற்கு விஜய் ரசிகர்கள் பலரும் அவருக்கு நன்றி, வாழ்த்து தெரிவித்தனர். அதாவது விஜய்யின் டுவிட்டுக்கு, 145.7k பேர் ரீடுவிட் செய்துள்ளனர்.

அமிதாப் ஆதிக்கம்
மேலும், அதிக பேர் கருத்து, மேற்கோள் காட்டிய ட்டுவிட்டாக நடிகர் அமிதாப்பச்சன் வெளியிட்ட டுவிட் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சன் அது குறித்து டுவிட்டரில் பதிவு செய்தார். இதனால் அவர் குணமடைய வேண்டி பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதாவது சுமார் 43.6k பேர் அவரது பதிவுக்கு கருத்து தெரிவித்தனர்.

உணர்ச்சிகளின் வெளிப்பாடு
டுவிட்டரில் நெட்டிசன்கள் சிரிப்பு, அழுகை, நன்றி, கோபம், பாசம் போன்ற தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த இந்த உணர்ச்சிகளை வெளிக்காட்டும் பொம்மைகள்(எமோஜிகள் ) உள்ளது. இந்த வருடம் முழுவதும் கொரோனா சோக மையத்தில் உலகம் விழுந்ததால், சோக எமோஜிகல் அதிகம் வெளிப்படுத்தபட்டு உள்ளன.

சிஎஸ்கே பிரபலம்
மேலும், விளையாட்டு கேஷ்டேக்குகளில் துபாயில் நடந்து முடிந்த ஐபிஎல் முதல் இடம் பெற்று உள்ளது. ஐபிஎல்லின் சென்னை சூப்பர் கிங்க்ஸ்(சிஎஸ்கே) இரண்டாவது இடத்திலும், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்று பயணம் செய்துள்ள நிலையில் இந்திய அணி என்ற கேஷ்டேக் டிரெண்டிங்கில் மூன்றாவது இடம் பெற்றுள்ளது.

சூரரை போற்று திரைப்படம்
சினிமா கேஷ்டேக் தரப்பில் 'தில் பேச்ரா' என்ற பாலிவுட் திரைப்படம் முதல் இடத்திலும், நடிகர் சூர்யா நடித்த 'சூரரை போற்று' திரைப்படம் இரண்டாவது இடத்திலும், தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த 'சரிலேரு நீகேவரு' என்ற திரைப்படம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.