சட்டவிரோத விசா வழக்கு- டெல்லி ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் அப்பீல்
டெல்லி: சட்டவிரோதமாக சீனர்களுக்கு விசா பெற்றுத் தர லஞ்சம் வாங்கியதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது தொடரப்பட்ட வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் மறுத்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் எம்.பி.யின் தந்தை ப.சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக 2011-ல் பதவி வகித்தார். அப்போது பஞ்சாப் மாநிலத்தில் செயல்பட்ட வேதாந்தா குழும நிறுவனத்தில் பணியாற்ற 253 சீனர்களுக்கு விசா வழங்கப்பட்டது. சட்டவிரோதமாக இந்த விசா வழங்கப்பட்டதாகவும் இதற்காக கார்த்தி சிதம்பரம் தரப்பு ரூ50 லட்சம் லஞ்சம் பெற்றது என்பது வழக்கு. இதில் அன்னிய செலாவணி மோசடி நடைபெற்றதாக கூறி அமலாக்கப் பிரிவும் வழக்கு பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் ஆகியோரது வீடு நிறுவனங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமனும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி இருந்தனர்.
இந்த வழக்கில் தம்மை கைது செய்யாமல் இருக்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார் கார்த்தி சிதம்பரம். இம்மனுவை சிபிஐ சிறப்ப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications