Vote from home: 85+ வயதான வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்.. தேர்தல் ஆணையர் அறிவிப்பு!
டெல்லி: 85 வயதைக் கடந்த வாக்காளர்கள், வீட்டில் இருந்தே வாக்களிப்பதற்கான வசதிகள் இந்த லோக்சபா தேர்தலில் செய்யப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகிய பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆண், பெண் வாக்காளர்கள், மாற்றுத் திறனாளி வாக்காளர்கள், வயதான வாக்காளர்கள் விவரங்களை அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்.
அதன்படி, தற்போது இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 96.88 கோடி.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை : 96,88,21,926
ஆண்கள் - 49,72,31,994
பெண்கள் - 47,15,41,888
மூன்றாம் பாலினத்தவர்கள் - 48,044
மாற்றுத்திறனாளிகள் - 88,35,449
18 - 19 வயதுக்குட்பட்ட முதல்முறை வாக்காளர்கள் - 1,84,81,610
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் - 82 லட்சம் பேர்
100 வயதுக்கு மேற்பட்டோர் - 2 லட்சத்து 18 ஆயிரம் பேர்
இந்தியாவில் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் - 82 லட்சம் பேர், 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2 லட்சத்து 18 ஆயிரம் பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். மேலும், . 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications