வக்பு சொத்தை பாதுகாக்க தான் சட்டத்திருத்தம்.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்
டெல்லி: ‛‛வக்ஃபு சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறாது. அடிப்படை உரிமைகள் மீறப்படும் என்பதில் உண்மையில்லை. இது வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பானது. மத சுதந்திரங்களை வக்ஃபு சட்டம் மீறாது. இந்த சட்டம் என்பது வக்ஃபு சொத்துகளை நிர்வகிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் மட்டுமே. இதனால் வக்ஃபு சட்டத்தை எதிர்க்கும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு சட்ட திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வக்ஃபு சட்ட திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

மேலும் ஒரு வார காலத்துக்குள் மத்திய அரசு, மத்திய, மாநில வக்ஃபு வாரியம், மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரம் என்பது தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இன்று மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரமாண பத்திரத்தை மத்திய அரசு சார்பில் சிறுபான்மையினர் நலத்துறையின் இணை செயலாளர் ஷிர்ஷா சி செய்க் மொஹிதீன் தாக்கல் செய்தார். இந்த பிரமாண பத்திரம் என்பது 1,332 பக்கங்களை கொண்டுள்ளது. அதில் வக்ஃபு சட்ட திருத்தம் கொண்டு வந்தது எதற்காக? அதற்கான நோக்கம் என்ன? என்பது பற்றி விரிவான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
அதில், ‛‛வக்ஃபு சட்டத்திருத்தம் மத உரிமைகளை பாதிக்காது. அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமைகளை மீறாது. அடிப்படை உரிமைகள் மீறப்படும் என்பதில் உண்மையில்லை. இது வக்ஃபு வாரிய சொத்துகளை நிர்வகிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பானது. மத சுதந்திரங்களை வக்ஃபு சட்டம் மீறாது.
அனைத்து வக்ஃபு மற்றும் பயன்படுத்தப்படும் சொத்துகள் அனைத்தும் உண்மையான சட்டம் 1923ன் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். பல தனியார் மற்றும் அரசு நிலங்கள் வக்ஃபு நிலங்கள் என்று உரிமை கோரப்பட்டன. இதனால் தனிநபர்களின் மதிப்புமிக்க சொத்துகள் பறிக்கப்பட்டது. பொது சொத்துகள் மீது புதிதாக உரிமைகள் கோரப்பட்டன. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.
இந்த வக்பு சட்டத்திருத்தம் என்பது இஸ்லாமியர் ஒருவர் சொத்துகளை வக்பு செய்வதை எந்த வகையிலும் தடுக்கவில்லை. நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் ஒவ்வொரு சட்டமும் அரசியல்சாசனத்துக்கு உட்பட்டது என்றும் வழக்கு தற்போது ஆரம்பகட்ட நிலையில் உள்ளதால் வஃக்பு 2025 சட்டத்தின் விதிகளை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் எந்த இடைக்கால உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம். வக்ஃபு சட்டத்திருத்தத்தை எதிர்க்கும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு பிரமாணபத்திரத்தில் வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications