ஜம்மு காஷ்மீர் 370-வது பிரிவு ரத்து செல்லும்- உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்க முடியாது: காங். ப.சிதம்பரம்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது; ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கி உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு 2019-ம் ஆண்டு ரத்து செய்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச், 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் செல்லும் என தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஏற்க முடியாது. இந்திய அரசியல் சாசனம் வழங்கிய 370-வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கு வழங்க வேண்டும் என்ற காங்கிரஸ் காரிய கமிட்டியின் தீர்மானத்தை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பு எதிர்காலத்தில் பல கேள்விகளை எழுப்பும். ஜம்மு காஷ்மீருக்கு முழுமையான மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. அவ்வளவு காலம் ஏன் ஒத்திப் போட வேண்டும்? ஜம்மு காஷ்மீருக்கு உடனே தேர்தலை நடத்த வேண்டும். லடாக் மக்களினது கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: 2014-ம் ஆண்டுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தலே நடத்தப்படவில்லை. ஜம்மு காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு 10 ஆண்டுகளாக இல்லை. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு ஏன் இவ்வளவு அச்சப்படுகிறது? இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பினார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications