துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்.. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா
டெல்லி: துப்பாக்கி முனையில் எந்த ஒரு நாட்டுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 90 நட்கள் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இருக்க கூடிய நேரத்தில் பியூஷ் கோயல் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை டிரம்ப் எடுத்து வருகிறார். அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது, வரி விதிப்பு என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

பியூஷ் கோயல் பதில்
அதிலும் டிரம்ப் எடுத்துள்ள பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை சர்வதேச அளவில் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு ஒவ்வொரு நாடும் விதிக்கும் வரிக்கு சமமாக வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்தார். அதன்படி, கடந்த 2-ம் தேதி இந்தியா உள்பட 75 நாடுகளுக்கான வரிவிதிப்பை வெளியிட்டார். சீன பொருட்கள் மீது முதலில் 20 சதவீதமும், பிறகு 34 சதவீதமும் வரி விதித்தார்.
சீனாவும் பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது. கடும் கோபம் அடைந்த டிரம்ப், சீன பொருட்கள் மீது மேலும் 50 சதவீத வரி விதித்தார். கடந்த 9 ஆம் தேதி, சீனாவை தவிர, பிற நாடுகள் மீதான வரிவிதிப்பை 90 நாட்கள் டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளார்.
பரஸ்பர வரி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பல்வேறு நாடுகள் முன்வந்து இருப்பதாகவும் அவர்கள் கோரிக்கையை ஏற்று இந்த 90 நாட்களுக்கு வரி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த நிலையில், துப்பாக்கி முனையில் எந்த ஒரு நாட்டுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-
துப்பாக்கி முனையில்
"எந்த ஒரு நாட்டுடனும் துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அதே நேரத்தில் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு சாதகமான நேர கட்டுப்பாடுகளுக்காக காத்திருக்கிறோம்" என்றார். டிரம்ப் 90 நட்கள் வரி விதிப்பை நிறுத்தி வைத்து இருக்க கூடிய நேரத்தில் பியூஷ் கோயல் இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்தாலி - இந்தியா பிசினஸ் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய பியூஷ் கோயல் கூறியதாவது:- "நாங்கள் ஒருபோதும் துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். சாதகமான நேர சூழலே விரைவான பேச்சுவார்த்தைக்கு நம்மை தூண்டும். நமது நாடு மற்றும் மக்களின் நலனை பாதுகாக்காத வரை பேச்சுவார்த்தைக்கு அவசரப்பட முடியாது. அமெரிக்கா, இங்கிலாட்ந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications