டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது சீன பிரதமர் கிம்ஜாங் உன்னா? கிம்மின் உருவபொம்மையையும் எரிச்சீட்டீங்களா?.. அடடே வங்கத்து பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை பாஜகவினர் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லடாக் எல்லையான கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா- சீன ராணுவத்தினருக்கிடையே கடந்த 15ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதனால் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.

இந்த மோதலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வந்தது. இரு நாட்டு எல்லைகளிலும் படைகள் தயார் நிலையில் இருந்தன. தற்போது அந்த பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்க இரு நாடுகளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

லடாக் ஷாக் ஓயாத நிலையில்.. இந்திய-சீன ராணுவத்தினர் மோதல், கைகலப்பு.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ லடாக் ஷாக் ஓயாத நிலையில்.. இந்திய-சீன ராணுவத்தினர் மோதல், கைகலப்பு.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ

இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள்

இதனிடையே லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன. அந்நாட்டு பொருட்களை தவிர்க்குமாறும் தடைவிதிக்குமாறும் பலர் கோரிக்கை விடுத்தனர்.

சீன அதிபர்

சீன அதிபர்

பல பகுதிகளில் சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும் சீன அதிபரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தியும் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜகவினர் சிலர் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவபொம்மையை எதிர்த்தனர்.

வீடியோ

வீடியோ

போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கூறுகையில் சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பிரதமர் கிம் ஜாங் உன்னின் உருவபொம்மையை எரித்து எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றனர். அந்த நபர் ஜூன் 18-ஆம் தேதி பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

உருவபொம்மை

உருவபொம்மை

ஜீ ஜின்பிங்கிற்கு பதிலாக மேற்கு வங்க பாஜகவினர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. யாருடைய உருவபொம்மையை எரிக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பாஜகவினர் இவ்வாறு செயல்படுவது அந்த மாநில தலைமைக்கு அசிங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

English summary
West Bengal BJP cadres burnt the effigy of Kim Jon Un instead of Xi Jinping. A video goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X