நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்.. 10வது நாளான இன்று.. அவையில் என்னென்னெ மசோதாக்கள் தாக்கலாகும்?
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. விவசாய சட்டம் ரத்து, எம்பிக்கள் அமளி, 12 எம்பிக்கள் சஸ்பெண்ட், எதிர்க்கட்சிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இந்த கூட்டத்தொடரில் நடந்துவிட்டது.

இந்த கூட்டத்தொடரில் தொடர் அமளி மற்றும் வாக்கு வாதம் காரணமாக பெரிய அளவில் மசோதாக்கள் வரிசையாக தாக்கல் செய்யப்படவில்லை. மாநிலங்களவையில் பெரிய அமளிக்கு பின்பே அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும் கூட அணை பாதுகாப்பு மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 10வது நாள் கூட்டம் இன்று நடக்க உள்ளது.
இந்த நிலையில் இன்று அவையில் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சர்வீஸ் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. அதேபோல் போதை பொருள் தடுப்பு பிரிவு தொடர்பான சட்ட திருத்த மசோதா ஒன்றும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
நேற்று அவையில் சிவிவி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் டெல்லி போலீஸ் மசோதா சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ராஜ்ய சபாவில் பாராமெடிக்கல் படிப்பு மற்றும் ஆய்வு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று அவையில் என்ன மசோதா தாக்கல் செய்யப்படும் என்று பார்க்கலாம்.
லோக்சபா:
போதை பொருள் தடுப்பு பிரிவு தொடர்பான சட்ட திருத்த மசோதா 2021 தாக்கல் செய்யப்படும்
ராஜ்ய சபா:
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் சர்வீஸ் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications