"கேம் சேஞ்சர்.." வேற லெவலில் பாய ரெடியாகும் இஸ்ரோ! அதென்ன ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை! அது ஏன் முக்கியம்
டெல்லி: ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைய இந்தியா சம்மதித்துள்ள நிலையில், இது இந்திய விண்வெளி துறைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற நிலையில், இந்த பயணத்தில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஜெட் இன்ஜின், டிரோன்கள் எனப் பல துறைகளில் உடன்பாடு ஏற்பட்டது.
அது அனைத்தையும் காட்டிலும் முக்கியமானதாக ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் இணைய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதைக் கடந்த வியாழக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை: விண்வெளியில் அமைதியான, நிலையான மற்றும் வெளிப்படையான ஒத்துழைப்பிற்கு வலியுறுத்தும் நாசா தலைமையிலான ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் தான் இந்தியா இப்போது இணையவுள்ளது. இது விண்வெளி துறையில் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்றே வல்லுநர்கள் கூறுகின்றனர். நாசா அறிமுகப்படுத்திய இந்த விண்வெளி ஒப்பந்தத்தில் பல விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.

இதில் உள்ள விதிகளை ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். நிலவு, செவ்வாய், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள் என விண்வெளியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆய்வுகளுக்கும் இது பொருந்தும். இந்த ஆய்வுகளை பின்பற்றும்போது உலக நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் எந்த மாதிரியான வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்பதை அவர்கள் விளக்கியுள்ளனர்.
உலக நாடுகள்: ஆஸ்திரேலியா, கனடா, இத்தாலி, ஜப்பான், லக்சம்பர்க், ஐக்கிய அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய எட்டு நாடுகள் இணைந்து ஆர்ட்டெமிஸ் ஒப்பந்தங்கள் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2020 அக்டோபர் 13ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு பல்வேறு நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவுக்கு முன்பு கடைசியாக ஈக்வடார் 26வது நாடாக இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தங்களில் 10 முக்கிய விதிகள் இடம் பெற்றுள்ளன. அமைதியான விண்வெளி ஆய்வு, வெளிப்படைத்தன்மை, பொதுவான ஆய்வு உள்கட்டமைப்பு மற்றும் தரநிலைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல விதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டவர்கள் விண்வெளியில் அவசர உதவிகளை வழங்க வேண்டும். தேவையான உதவிகளையும் செய்ய வேண்டும் என இதில் கூறப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: கடந்த 1967ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அவுடர் ஸ்பேஸ் ஒப்பந்தத்தை (OST) அடிப்படையில் இந்த ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. இதில் அமைதியான விண்வெளியின் ஆய்வு மற்றும் பயன்பாட்டு என பல்வேறு வழிகாட்டுதல்கள் கூறப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வுகளில் இந்த ஆர்ட்டெனிஸ் ஒப்பந்தம் ஒரு ரோட் மேப்பாக இருக்கும்.
இப்போது முதற்கட்டமாக ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கை தீழ் 2025ஆம் ஆண்டுக்குள் சந்திரனுக்கு எளிதாக மனிதர்களை அனுப்பும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவின் நாசா தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளது. வரும் காலத்தில் மனிதர்களைச் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒரு தொடக்கமாக நிலவுக்கு அனுப்புவது இருக்கும்.
இப்படிப் பல முக்கிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த உடன்படிக்கையில் தான் இப்போது இந்தியா இணைந்துள்ளது. வரும் காலங்களில் இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இது ஒரு பெரிய உந்துதலாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. மேலும், இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து சாட்டிலைட்களையும் அனுப்பவுள்ளது.
-
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்!












Click it and Unblock the Notifications