2024இல் எகிறி அடிக்கும் இஸ்ரோ.. பக்காவான 10 மிஷன்கள்.. அதிலும் கடைசி மிஷன் இருக்கே.. வாவ் வேற லெவல்
டெல்லி: இஸ்ரோ நிறுவனம் அடுத்தாண்டு என்ன ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது என்பது குறித்த முக்கிய தகவல்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது.
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தாண்டு சந்திரயான் 3 மூலம் முதல்முறையாக நிலவின் தென் துருவத்தில் இஸ்ரோ இறங்கியது.

இதுவரை உலக நாடுகளின் எந்தவொரு ராக்கெட்டும் தென் துருவத்தில் இறங்கியதே இல்லை. அடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டங்களிலும் இஸ்ரோ இப்போது கவனம் செலுத்தி வருகிறது.
இஸ்ரோ: இதற்கிடையே 2024ஆம் ஆண்டில் இஸ்ரோ மொத்தம் 10 முக்கிய திட்டங்களை வைத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிஎஸ்எல்வி மூலம் ஆறு மிஷன்கள், ஜிஎஸ்எல்வி மூலம் 3 மிஷன்கள், லான்ச் வெகிக்கல் மார்க்-3 மூலம் ஒன்று என மொத்தம் 10 முக்கிய திட்டங்களை இஸ்ரோ அடுத்தாண்டு திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எம்பி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்திருந்தார். அதில் இஸ்ரோ அதன் புதிய ஏவுகணையான எஸ்எஸ்எல்வியை சோதனை செய்யவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல ககன்யான் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு ஆளில்லா பயணங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இவை விண்வெளி வீரர்களை அழைத்துச் செல்வது குறித்தும் சுற்றுப்பாதை குறித்தும் முக்கிய தகவல்களை அளிக்கும்.
மேலும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் க்ரூ எஸ்கேப் அமைப்பு சரியாகச் செயல்படுகிறதா என்பது குறித்தும் இஸ்ரோ பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி: அதேபோல பிஎஸ்எல்வி திட்டத்தின் கீழ் ஆறு ராக்கெட்களை அனுப்ப உள்ளது. விண்வெளி அறிவியல் சார்ந்த ஒரு சாட்டிலைட்டை அனுப்ப உள்ளது. மேலும், புவி கண்காணிப்பு தொடர்பான இரண்டு மிஷன்கள், தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு மிஷன்கள், வணிக ரீதியான இரண்டு மிஷன்கள் என மொத்தம் 6 மிஷன்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் செயல்படுத்த உள்ளது.
ஜிஎஸ்எல்வி: மூன்று ஜிஎஸ்எல்வி மிஷன்களையும் வானிலை ஆய்வு மையம் திட்டமிட்டுள்ள நிலையில், அதன் மூலம் ஒரு வானிலை தொடர்பான சாட்டிலைட், ஒரு நேவிகேஷன் சாட்டிலைட், நாசா-இஸ்ரோ கூட்டு முயற்சியில் அனுப்பப்பட்டும் சாட்டிலைட் என மூன்று சாட்டிலைட்களை இஸ்ரோ அனுப்ப உள்ளது.
இது முக்கியம்: அதேபோல அடுத்தாண்டு முதல்முறையாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய ராக்கெட்கள் தொடர்பாகவும் இஸ்ரோ சோதனை செய்யவுள்ளது. நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் கீழ் வாங்கப்பட்ட ஏவுகணை மூலம் ஜிசாட் 20 செயற்கைக்கோளைச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது உள்ளிட்ட இரு திட்டங்களையும் இஸ்ரோ வைத்துள்ளது. இஸ்ரோவுக்கு இது ரொம்வே முக்கியமான சோதனையாக இருக்கும்.
ஏனென்றால் ஒவ்வொரு முறையும் ராக்கெட் அனுப்ப பல நூறு கோடி செலவாகும். இதனால் ஒரே ராக்கெட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் முறை சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இதன் மூலம் ராக்கெட் அனுப்பும் செலவு சுமார் 40% வரை குறையும். எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இதன் மூலம் பல ராக்கெட்களை அனுப்பி வருகிறது. இப்போது இஸ்ரோவும் அதைக் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications