டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இசிஜி மாதிரி ஏறுது இறங்குது..குழப்பும் கொரோனா!இந்தாண்டு 4வது அலை சாத்தியமா? நிபுணர்கள் கருத்து என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் அளவானது மீண்டும் உச்சத்தை தொட்டு வரும், நிலையில் இந்தியாவில் கொரோனா 4வது அலை வருமா, அதுகுறித்து நிபுணர்கள் சொல்வது என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்..

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பின் அளவானது மீண்டும் உச்சத்தை தொட்டு வருகிறது. 10 ஆயிரத்துக்குள் இருந்த பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

கோவிட் -19 வழக்குகள் மகாராஷ்டிராவில் கடந்த செவ்வாய்க்கிழமை 40% அதிகரித்த நிலையில், மும்பையின் தினசரி எண்ணிக்கையும் கிட்டத்தட்ட 30% அதிகரித்து, திங்களன்று 1,310 ஆக இருந்ததுல். அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையில் 1,781 ஆக இருந்தது.

வேகமெடுக்குது கொரோனா “பூஸ்டர் டோஸ் போடுங்க” கட்டாயம் போடவேண்டியது இவ்வளவு பேரா? அரசு அறிவுறுத்தல்! வேகமெடுக்குது கொரோனா “பூஸ்டர் டோஸ் போடுங்க” கட்டாயம் போடவேண்டியது இவ்வளவு பேரா? அரசு அறிவுறுத்தல்!

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு


டெல்லியை அடுத்து மும்பையிலும் நிலைமை மோசமடைந்து வருகிறது. தினசரி சோதனை நேர்மறை விகிதம் 16.9% ஆக உயர்ந்துள்ள் நிலையில், மும்பையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜூன் 15 அன்று 4,000ஐத் தாண்டியது. கொரோனா அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி, ஹரியானா,கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாபிலும் முகக்கவசம் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரவல் அதிகம்

பரவல் அதிகம்

ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 வகை மாறுபாடு காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் விரைவில் நான்காம் அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ள சூழ்நிலையில், கடந்த சில நாட்களாக தேசிய அளவில் கொரோனா தினசரி பரவல் விகிதம் ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் எண்ணிக்கை

அதிகரிக்கும் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 17 ஆயிரத்து 336ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 78 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நிபுணர்கள் கருத்து

நிபுணர்கள் கருத்து

இந்நிலையில் இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தாலும், கொரோனா நான்காவது அலை உருவாகாது என இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஆர்.கங்ககேத்கர் தெரிவித்திருந்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாநில அரசுகளை மத்திய சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ள நிலையில், தற்போதைய சூழ்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது மட்டுமே, இந்தியாவில் கொரோனா 4ம் அலை உருவாகாமல் தடுப்பதற்கு சிறந்த தீர்வாகும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

English summary
The level of corona exposure in India has been peaking again for the last few days, so what will the experts say about the 4th wave of corona in India? Let's look at ..
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X