"சிவனின் இருப்பிடம்.." யாராலும் ஏறவே முடியாத கைலாய மலை.. "கறுப்பு வைரத்தை" கையில் எடுத்த மத்திய அரசு
டெல்லி: சிவனின் இருப்பிடமாகக் கருதப்படும் கைலாய மலையைப் பக்தர்கள் எளிதாக தரிசிக்க மத்திய அரசு கையில் எடுத்துள்ள கறுப்பு வைரம் மிக விரைவில் முடிய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இமயமலை என்று சொன்னவுடன் பலருக்கும் அங்குள்ள மிகப் பெரிய சிகரங்களும் அதன் மேலே இருக்கும் வெண்பனியும் தான் ஞாபகத்திற்கு வரும்.. இந்தியா, சீனா, நேபாளம் என்று இந்த இமயமலை பரந்து விரிந்து இருக்கிறது.
அங்கே இருக்கும் எவரெஸ்ட் சிகரம் தான் உலகிலேயே மிக உயரமான ஒரு சிகரமாகும். இது 8849 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இருப்பினும், அந்த உயரமான எவரெஸ்ட் சிகரத்தைப் பலரும் வெற்றிகரமாக ஏறியுள்ளனர்.

கைலாய மலை: ஆனால், இதே இமயமலையில் இதற்கு மிக அருகில் திபத்தில் அமைந்துள்ளது கைலாய மலை. உயரத்தில் எவரெஸ்ட் சிகரத்தைக் காட்டிலும் குறைவாக 6,638 மீட்டர் மட்டுமே உயரமானதாக இந்த கைலாய சிகரம் இருந்தாலும், இதுவரை ஒருவர் கூட இதன் சிகரத்தை அடைந்ததே இல்லையாம். ஏனென்றால் இதன் மேற்பகுதி மிகவும் செங்குத்தாக இருக்கும். இதனால் யாராலும் இதன் சிகரத்தை அடைய முடியவே இல்லை.
அங்கே ஏற்படும் திடீர் வானிலை மாற்றம், வழிகளில் ஏற்படும் குழப்பம் எனப் பல காரணங்களால் மலை ஏற முயன்றவர்களால் அதன் சிகரத்தை அடைய முடிந்ததே இல்லை. இதற்கு என்ன காரணம் என்பதை ஆய்வாளர்களாலும் தெளிவாகச் சொல்ல முடிந்ததே இல்லை. அதாவது அதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இல்லை. அதேநேரம் யாராவது மலைச் சிகரத்தை அடைந்தால்.. இந்த சிகரம் அதன் தெய்வீகத்தை இழந்துவிடும் என்றும் இந்துக்கள் கருதுகின்றனர்.
சிவனின் இருப்பிடம்: மேலும், இதைச் சிவனின் இருப்பிடமாகவே இந்துக்கள் கருதுகின்றனர். எனவே, இதை வழிபடவும் செய்கிறார்கள்.. இதற்கிடையே வரும் செப்டம்பர் முதல் சிவபெருமானின் இருப்பிடமாக நம்பப்படும் இந்த கைலாய மலையை இந்தியாவில் இருந்து பக்தர்கள் தரிசிக்க முடியும். பித்தோராகர் மாவட்டத்தில் இருக்கும் நாபிதாங் என்ற கேஎம்விஎன் ஹட்ஸ் (KMVN Huts) என்ற இடம் முதல் இந்தியா-சீனா எல்லையில் உள்ள லிபுலேக் பாஸ் வரை சாலையை அமைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகிறது.
இந்த பணிகளை பிஆர்ஓ எனப்படும் எல்லைச் சாலைகள் அமைப்பு (Border Roads Organisation) மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பிறகு விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து பிஆர்ஓ அமைப்பின் தலைமைப் பொறியாளர் விமல் கோஸ்வாமி கூறுகையில், "கேஎம்விஎன் ஹட்ஸ் முதல் லிபுலேக் வரை நாபிதாங்கில் சுமார் 6.5 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையை அமைக்கும் பணிகள் இப்போது நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்தவுடன் சாலையோரம் "கைலாஷ் வியூ பாயின்ட்' ரெடியாகிவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
கைலாஷ் வியூ பாயின்ட்: கைலாஷ் வியூ பாயின்ட்டை உருவாக்கும் இந்தத் திட்டத்திற்கு ஹிராக் பிராஜக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்துக்கள் இந்த கைலாய மலையை சிவபெருமானின் இருப்பிடமாகக் கருதுகிறார்கள். இதனால் இந்த மலையைத் தரிசிக்கும் வகையிலான வியூ பாயின்ட்டை அமைக்கவே மத்திய அரசு ஹிராக் பிராஜக்ட்டை (கருப்பு வைரம் என அர்த்தம்) அறிவித்துள்ளது.
சாலை வெட்டும் பணிகள் படுவேகமாக நடந்து வருவதாகத் தெரிவித்துள்ள அதிகாரிகள், வானிலை சாதகமாக இருந்தால் வரும் செப்டம்பருக்குள் இந்த பணிகள் முழுமையாக முடியும் என்றும் அதன் பிறகு பக்தர்களால் கைலாய மலையைத் தரிசிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.
லிபுலேக் கணவாய் வழியாகச் செல்லும் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு அது மீண்டும் தொடங்கப்படவில்லை. இந்தச் சூழலில் தான் பக்தர்கள் கைலாய மலையை அணுகுவதற்கு மாற்றுப் பாதையை அமைக்க மத்திய அரசு இந்த ஹிராக் பிராஜக்ட்டை மத்திய அரசு தீவிரமாக முன்னெடுத்தது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications