மோடி கையில் எடுக்கும் "வெற்றி" பார்முலா.. வேட்பாளர் தேர்வில் சர்ப்ரைஸ்.. பாஜக பிளான் இதுதான்
டெல்லி: நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், பாஜக ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பாஜக வேட்பாளர்களை எப்படித் தேர்வு செய்தது என்பது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிக விரைவில் நாட்டில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இதற்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த முறை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பாஜக மிகவும் விரிவான ஒரு செயல்முறையைப் பின்பற்றியதாகக் கூறப்படுகிறது.
தீவிர ஆலோசனை: நேற்றிரவு நடந்த மீட்டிங்கில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் முதற்கட்டமாக சுமார் 100 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.
நிச்சயம் "சிஏஏ" வந்திடும் போலயே.. அமித் ஷா கார் நம்பர் பிளேட்டை நோட் பண்ணீங்களா! டிரெண்டாகும் போட்டோ
வேட்பாளர் தேர்வு: இந்த வேட்பாளர்கள் தேர்வுக்கு பாஜக பின்பற்றிய செயல்முறைகள் குறித்து நாம் பார்க்கலாம். முதலில் தொழில்நுட்ப உதவியுடன் பாஜக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற்றுள்ளது. நமோ செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்குடன் இருக்கும் 3 பேரைத் தேர்வு செய்து அவர்கள் குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளனர். உள்ளூர் மக்களுடன் எந்தளவுக்கு கனெக்ஷன் உடன் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறியவே இந்த நடைமுறையாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பாஜக தொடர்ச்சியாக அக்கட்சியின் எம்பிகள் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஒவ்வொரு லோக்சபா தொகுதியிலும் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறியத் தனியார் நிறுவனத்தின் உதவியையும் பாஜக நாடி இருக்கிறது. அவர்களின் ரிப்போர்ட்டும் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்கு வகிக்கும் எனச் சொல்லப்படுகிறது.
தீவிர ஆய்வு: இது போக அமைச்சர்களும் நேரடியாகக் களத்தில் இறங்கி லோக்சபா தொகுதிகளுக்குச் சென்று, எம்பிக்கள் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகளைக் கொடுத்துள்ளனர். இந்த அனைத்து தகவல்களும் சேகரிக்கப்பட்ட பிறகு, மாநில அளவிலான தேர்தல் குழு அமைக்கப்படும். அந்த தேர்தல் குழு தான் இறுதி முடிவை எடுத்துள்ளனர். அவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்து பெயர்களை டெல்லி தலைமைக்கு அனுப்பும். அந்த லிஸ்டை ஆய்வு செய்து நட்டா, அமித் ஷா பி.எல்.சந்தோஷ் போன்ற உயர்மட்டத் தலைவர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள்.
மோசமான செயல்பட்ட சிட்டிங் எம்.பி.க்களை யோசிக்காமல் நீக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி பார்க்கும் போது குறைந்தபட்சம் 60-70 சிட்டிங் எம்பிக்களுக்கு பதிலாக புது முகங்களுக்கு சீட் தரப்படும் என தெரிகிறது. அதேநேரம் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் பலர் மீண்டும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 பொதுத் தேர்தலில், பாஜகவில் இருந்து 85 ஓபிசி எம்பிக்கள் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இந்த முறையும் பாஜக மீண்டும் வாய்ப்பளிக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications