உயர் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க ​​காலக்கெடுவை மீண்டும் நீட்டித்த EPFO? என்ன காரணம்? விண்ணப்பிக்கலாமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 11 வரை நீட்டித்துள்ளது. இதற்கு பின் பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 26ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டு உள்ளது. கூடுதல் உயர் ஓய்வூதிய விருப்பத்திற்காக, இதுவரை 16.06 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக EPFO ​​அறிக்கை தெரிவித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக இப்படி காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த முறை காலக்கெடுவை நீட்டிப்பதில் சில வித்தியாசங்கள் உள்ளன. அதன்படி நிறுவனங்களுக்கு செப்டம்பர் 30 வரை மூன்று மாதங்கள் கூடுதல் அவகாசம் மற்றும் ஊழியர்களுக்கு ஜூலை 11 வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

What is the reason behind EPFO increasing the deadline to apply for higher pensions? Is it good?

ஏன் நீட்டிப்பு?: அதிக ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு டெபாசிட் செய்ய வேண்டிய தொகை குறித்த தெளிவு இல்லாததால், விண்ணப்பதாரர்கள் தொடர்ச்சியான சிக்கல்களை , குழப்பங்களை எதிர்கொண்டு வருகின்றன. விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் இதனால் சிலர் சிரமங்களை எதிர்கொண்டனர். இதுவே நீட்டிப்பு செய்ய காரணம்.

முக்கியமாக தங்களின் EPF UAN (Universal Account Number) உடன் இணைக்கப்பட்ட ஆதாரில் மாற்றங்களைச் செய்தவர்களில் பலரால் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியவில்லை. ஆதார் சீடிங்கில் பிரச்சனை வந்துள்ளது. அதிலும் ஆதார் விவரங்கள் மாற்றப்பட்ட விண்ணப்பங்களில் முறையான சரிபார்ப்பு இல்லாமல் இந்த மாற்றங்களை அனுமதிப்பதில் அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் உள்ளனர். எனவே, அத்தகைய விண்ணப்பங்களைச் செயல்படுத்த அதிக நேரம் எடுப்பதால் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இது போக நிறுவனங்கள் - ஊழியர்கள் சேர்ந்து மேற்கொள்ளும் joint option validation முறையை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பல நிறுவனங்கள் தங்களின் நீண்ட கால ஊழியர்களின் சம்பளத்திற்கான கடந்த கால ஆவணங்களை கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன தற்போது வரை பென்ஷன் அதிகாரிகள் 15 லட்சம் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர், அவற்றில் 3-4 லட்சம் விண்ணப்பங்கள் ஓய்வு பெற்றவர்களிடமிருந்தும், மீதமுள்ளவை தற்போதைய சந்தாதாரர்களிடமிருந்தும் வந்தவை. இதை எல்லாம் சோதனை செய்ய நேரம் எடுக்கும்.

தற்போது உள்ள பென்சன் முறை: EPFO ஆல் நிர்வகிக்கப்படும் EPS, 1995 இல் நடைமுறைக்கு வந்தது. ஓய்வூதிய நிதியானது PF கார்பஸில் நிறுவனங்களின் பங்களிப்பில் 8.33% வைப்புத்தொகையை கொண்டு இருந்தது. பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் இரண்டும் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி மற்றும் retaining allowanceல் 12% EPFக்கு பங்களிக்கின்றனர். இன்னொரு பக்கம் பணியாளரின் முழு பங்களிப்பும் EPF க்கு செல்கிறது, அதே நேரத்தில் முதலாளியின் 12% பங்களிப்பு EPF க்கு 3.67% மற்றும் EPS க்கு 8.33% என பிரிக்கப்படுகிறது. ஊதிய வரம்புக்குக் கீழே உள்ளவர்களுக்கு ஒரு ஊழியரின் ஓய்வூதியத்திற்காக இந்திய அரசு 1.16% பங்களிப்பை நேரடியாக வழங்குகிறது.

இபிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் 5,000 ரூபாயாக இருந்தது. இது பின்னர் ரூ.6,500 ஆகவும், செப்டம்பர் 1, 2014 முதல் ரூ.15,000 ஆகவும் உயர்த்தப்பட்டது. தற்போது ஓய்வூதிய பங்களிப்பு ரூ.15,000 இல் 8.33% ஆகும், அதாவது ரூ. 1,250 ஆகும். 58 வயதிற்குப் பிறகு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவை செய்து 58 வயதில் ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

ஒரு ஊழியர் 50 முதல் 57 வயதிற்குள் வேலையை விட்டு வெளியேறினால், அவர்கள் முன்கூட்டியே (குறைக்கப்பட்ட) ஓய்வூதியத்தைப் பெறலாம். பின்வரும் பார்முலாபடி மாதாந்திர ஓய்வூதியம் கணக்கிடப்படுகிறது: மாதாந்திர ஓய்வூதியம் = ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x ஓய்வூதியம் பெறக்கூடிய வேலை ஆண்டுகள்/ 70. செப்டம்பர் 1, 2014 வரையிலான ஓய்வூதிய சேவைக்கான அதிகபட்ச மாத ஓய்வூதிய ஊதியம் ரூ. 6,500 அதன் பிறகு ரூ. 15,000 என்பது குறிப்பிடத்தக்கது.

What is the reason behind EPFO increasing the deadline to apply for higher pensions? Is it good?

புதிய பென்சன்: இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் தோல்வி காரணமாக வரப்போகும் மற்ற தேர்தல்களில் வெற்றிபெறுவதற்காக தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.

இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில்தான் இந்த அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை கையில் எடுக்க நினைக்கும் நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது .

வேறுபாடு என்ன? : தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.

அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.

புதிய ரூல்: இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+