தமிழகத்தில் ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க காரணம் என்ன?.. எப்படி பரவியது?.. வெளியான தகவல்!
டெல்லி: உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாடாய்படுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமிக்ரான் பல நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஓமிக்ரான் டெல்டா வைரஸை விட வீரியம்மிக்கது என்றும் கூறப்படுகிறது.

அச்சுறுத்தும் ஓமிக்ரான் வைரஸ்
இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தாலும் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது. இந்தியாவில் 422 ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
நாட்டில் முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. தமிழ்நாட்டிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவி அச்சுறுத்தி வருகிறது.

ஒருவர் மூலம் வேகமெடுத்த கொரோனா
தமிழகத்தில் முதன் முதலில் ஒருவருக்குதான் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மேலும் 33 பேருக்கு ஓமிக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் ஓமிக்ரான் மொத்த பாதிப்பு 34 ஆக உயர்ந்தது. அதாவது சென்னையில் ஒருவர் மூலம் மட்டுமே 39 பேருக்கும் ஒமிக்ரான் அறிகுறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

3,038 பேருக்கு பரிசோதனை
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அந்த ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகுதான் அவர்களுடன் தொடர்பில் இருந்த 3,038 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
Recommended Video

7 நாள் தனிமை கட்டாயம்
அதில் 54 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இதில் 39 பேருக்குஒமிக்ரான் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த முதல் நோயாளி வெளிநாடே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே தமிழ்நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க காரணமாகும். ஓமிக்ரான் மேலும் பரவாமல் இருக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 7 நாள் தனிமை கட்டாயம் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. பொதுவெளியில் புத்தாண்டு கொண்டாடுவதை தவிர்க்கும்படியும் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
-
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications