10 முறை முதல்வர்.. ஒரே நேரத்தில் சம்பளம்+ ஓய்வூதியத்தை பெறும் நிதிஷ்! அது எப்படி? எவ்வளவு கிடைக்கும்
பாட்னா: பீகாரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ அரசு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. அங்கு நிதிஷ்குமார் 10வது முறையாக நேற்று முதல்வராகப் பதவியேற்றார். அவர் இதற்கு முன்பு எம்பியாகவும் இருந்துள்ளார். அதன்படி முதல்வராக அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்... எம்பியாக எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பீகார் மாநிலத்தில் கடந்த வாரம் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் என்டிஏ மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. 200+ தொகுதிகளில் என்டிஏ வென்ற நிலையில், நேற்றைய தினம் அங்கு அமைச்சரவை பதவியேற்றது. பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் 10வது முறையாகப் பதவியேற்றார்.

நிதிஷ்குமார்
நிதிஷ்குமார் இப்போது முதல்வராக இருக்கும் நிலையில், அதற்கான ஊதியத்தைப் பெறுவார்.. அதேநேரம் இதற்கு முன்பு அவர் எம்பியாக இருந்துள்ளார். எனவே அதற்கான ஓய்வூதியமும் கிடைக்கும். மேலும், முதலமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட, சட்டசபை உறுப்பினராக இருந்ததால் அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு அவருக்கு ஒன்று இரண்டாகவே ஓய்வூதியங்கள் கிடைக்கும்.
ஓய்வூதியம் எவ்வளவு?
நிதிஷ் குமார் 1989 முதல் 2004 வரை எம்பியாக இருந்துள்ளார். நமது நாட்டின் சட்டப்படி ஒருவர் ஒரு நாள் எம்பியாக இருந்தாலும் கூட அவர்களுக்கு ₹31,000 ஓய்வூதியம் பெறுவார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் எம்பியாக இருந்தால் ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக ₹2,500 வழங்கப்படும். அகவிலைப்படி எல்லாம் சேர்த்தால் அவருக்கு ஓய்வூதியமாகவே ₹68,500 கிடைக்கும்.
இது அவரது முந்தைய பதவிக்கான ஓய்வூதியம். இப்போது அவர் பீகார் முதல்வராக இருக்கும் நிலையில், அவருக்குச் சம்பளமாக ₹2.5 லட்சம் கிடைக்கும். மேலும், வீடு, அலுவலகம் உள்ளிட்ட சலுகைகளும் அவருக்குக் கிடைக்கும். பீகாரில் இதர அமைச்சர்களுக்கு மாதச் சம்பளம் ₹65,000 தரப்படுகிறது. மேலும், அலவன்ஸாக ₹70,000 வரை வழங்கப்படும்.
சம்பளம்
நிதிஷ்குமார் 10 முறை முதல்வராக இருந்தாலும் அவர் எம்எல்ஏ இல்லை. மாறாக அவர் எம்எல்சி எனப்படும் சட்ட மேலவை மூலமாகவே உறுப்பினராக இருக்கிறார். இருப்பினும், இரண்டிற்கும் ஓய்வூதிய விதிகள் ஒன்றுதான். அதன்படி எம்எல்சி ஓய்வூதியமாக அவருக்கு ₹45,000 கிடைக்கும்.
மொத்த ஓய்வூதியம்
அவர் 1985-இல் முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அதற்கு அடிப்படை ஓய்வூதியமாக ₹45,000 கிடைக்கும்.. அதன் பிறகு சில ஆண்டுகள் தேசிய அரசியலில் கவனம் செலுத்திய அவர், 2004இல் மீண்டும் இரண்டாவது முறையாக எம்எல்சி ஆனார். முன்பே குறிப்பிட்டது போல அங்கு எம்எல்ஏ மற்றும் எம்எல்சிக்கான ஓய்வூதிய விதிகள் ஒரே மாதிரியானவை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியக் கணக்கீட்டைப் போலவே இதற்கும் கணக்கிடப்படும்.
அதாவது அவரது பணிக் காலத்தைப் பொறுத்து இந்த ஓய்வூதியம் கணக்கிடப்படும். நிதிஷ் குமார் 2005 முதல் 2025 வரை 21 ஆண்டுகள் எம்எல்சியாக இருந்துள்ளார். இந்த காலத்திற்கான அவரது மொத்த ஓய்வூதியம் ₹8,40,000. அடிப்படை ஓய்வூதியமான ₹45,000-ஐ சேர்த்தால், எம்எல்சியாக அவரது மொத்த ஓய்வூதியம் ₹1,38,000 ஆகும். இதை அவரது எம்பி ஓய்வூதியத்தோடு சேர்த்தால் அவருக்கு மொத்த ஓய்வூதியமாக மட்டும் ₹2,03,000 கிடைக்கும்.
பீகார் அரசியல்
பீகார் சட்டசபை உறுப்பினர்கள், அதாவது எம்எல்ஏக்களின் மாதச் சம்பளம் ₹1.4 லட்சம் முதல் ₹1.5 லட்சம் வரை இருக்கும். அவர்களின் அடிப்படைச் சம்பளம் ₹50,000 ஆகும். இதுபோக தொகுதிப் படி ₹55,000, உதவியாளருக்கான ₹40,000 மற்றும் இதர செலவுகளுக்கு ₹15,000 வழங்கப்படுகிறது.. மேலும், சட்டசபை நடக்கும்போது தினசரி ₹3,000 கூடுதலாகப் பெறுகின்றனர்.
பீகார் எம்எல்ஏக்களுக்கு வேறு பல சலுகைகளும் தரப்படுகிறது. ஆண்டுக்கு ₹4 லட்சம் வரை ரயில் அல்லது விமானப் பயணங்களை மேற்கொள்ளலாம். மேலும், ₹25 லட்சம் வரை குறைந்த வட்டி கார் கடன்கள், பாட்னாவில் அரசு பங்களா வழங்கப்படும். மேலும், எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச அல்லது சலுகை விலையில் மருத்துவச் சிகிச்சையும் தரப்படும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications