"லிப்லாக்" எல்லாம் இனி நோ சான்ஸ்! ஒவ்வொரு பெட்டியிலும் இறங்கும் போலீஸ்! டெல்லி மெட்ரோவில் பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க இப்போது அதிரடி திட்டம் ஒன்றைச் செயல்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் பல்வேறு முக்கிய நகரங்களிலும் போக்குவரத்து ஒரு முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது. வெளியே சென்றாலே குறிப்பிட்ட நேரம் சாலையிலேயே காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

இதனால் நகரவாசிகள் பெரும்பாலானோர் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்களிலும் கனேக்டிவிட்டிக்கு முக்கிய பொது போக்குவரத்தாக மெட்ரோ தான் இருக்கிறது..

 What Police plan to stop bad activities in Delhi Metro coaches

மெட்ரோ: டிராபிக் பிரச்சினை இல்லை, பன்சுவாலிட்டி என அனைத்தும் பக்காவாக இருப்பதால் மெட்ரோவை பயன்படுத்தவே ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் நாட்டில் மிகவும் விரிவான மெட்ரோ அமைப்பைக் கொண்டது டெல்லி. பல ஆண்டுகளாக இயங்கும் இந்த டெல்லி மெட்ரோவை இப்போது தினசரி பலரும் பயன்படுத்துகின்றனர். இப்படிப் பல லட்சம் பேர் பயன்படுத்தும் டெல்லி மெட்ரோவில் நடக்கும் பல சம்பவங்கள் பேசுபொருள் ஆகி வருகிறது.

டெல்லி மெட்ரோவில் சில மோசமான அநாகரீக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் கண்ணியமாக நடந்து கொள்ளும்படி டெல்லி மெட்ரோ நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தாலும் கூட, சில அத்துமீறல் சம்பவங்கள் அங்கே நடந்தே வருகிறது. இப்படித்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லி மெட்ரோவில் பிகினி உடையில் இளம் பெண் ஒருவர் பயணித்தார். 2 பீஸ் உடையில் வந்த அந்த பெண்ணை பலரும் விமர்சித்தனர்.

 What Police plan to stop bad activities in Delhi Metro coaches

அது ஓய்வதற்குள் இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்யும் வீடியோ, இரு ஆண்கள் நெருக்கமாக இருக்கும் வீடியோ என பகீர் கிளப்பியது. டெல்லி மெட்ரோ மிக மோசமானதாக மாறி வருகிறது. இதனிடையே டெல்லி மெட்ரோவுக்குள் ஆபாச செயல்களைத் தடுக்கும் முயற்சியாக டெல்லி போலீசார் அங்கே களமிறங்க உள்ளனர்.

போலீசார் சோதனை: அவர்கள் சாதாரண உடையில் மெட்ரோவில் வலம் வருவார்களாம். எங்கெல்லாம் இதுபோன்ற ஆபாச சம்பவங்கள் நடக்கிறது என்பதை அவர்கள் கண்டறிந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார், அங்கே ரோந்து பணிகளில் ஈடுபடப் போகிறார்களாம். இந்த காவல்துறை அதிகாரிகள் அத்துமீறும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கையை எடுப்பார்கள்.

 What Police plan to stop bad activities in Delhi Metro coaches

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "மெட்ரோவில் ஆபாச நடவடிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளோம். டெல்லி மெட்ரோ அதிகாரிகள் மற்றும் இரண்டு சிஐஎஸ்எஃப் பணியாளர்களும் இதுபோன்ற செயல்களைக் கண்காணிப்பார்கள். முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் போலீசார் நிறுத்தப்படுவார்கள்.

ஆபாச நடவடிக்கைகள்: அவர்கள் ரேண்டமாக ஒரு பெட்டிகள் நுழைந்து ஆபாச நடவடிக்கைகளைக் கண்காணிப்பார்கள். சில நிலையங்கள் பயணித்துவிட்டு இறங்கிவிடுவார்கள். அதேபோல பெண் பெட்டிகளைப் பெண் போலீசார் கண்காணிப்பார்கள். இவர்கள் சாதாரண உடையிலேயே இருப்பார்கள். அதேபோல போலீசார் சீருடையிலும் சில அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளைச் செய்வார்கள்" என்றார்.

சமீபத்தில் தான் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் இது போன்ற சம்பவங்களைத் தடுக்க ரயில் நிலையங்களிலும் மெட்ரோ பெட்டிகளுக்குள்ளும் ரோந்து பணியை வலுப்படுத்துமாறு டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளனர்.

 What Police plan to stop bad activities in Delhi Metro coaches

அபராதம் விதிக்கப்படும்: டெல்லி மெட்ரோ அதிகாரி கூறுகையில், "நாங்களும் ரோந்து பணிகளில் ஈடுபடுகிறோம். ஆபாச செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும்... சில தீவிரமான வழக்குகளில், டெல்லி போலீஸ் அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள். அவர்கள் மீது ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.

பெட்டிகளுக்குள் உள்ள சிசிடிவி கேமராக்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். அதற்கேற்ப பெட்டியில் உள்ள போலீசாருக்கு தகவல் அளிக்கப்படும். மேலும், பயணிகள் 155370 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டும் தேவையான தகவல்களைத் தெரிவிக்கலாம்.

மேலும், இது போன்ற சம்பவங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம்.. அதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டு அறைக்குப் புகார் அளிக்க வேண்டும். ரயில்களைப் போலவே முக்கியமான ஸ்டேஷன்களில் போலீசார் நிறுத்தப்படுவார்கள். சம்பவம் அத்துமீறிச் செல்லும் போது அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+