டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அப்பாடா".. delete for everyone-க்கு பதிலாக delete for me கொடுப்பவரா நீங்க? இனி கவலையில்லை

Google Oneindia Tamil News

டெல்லி: வாட்ஸ் அப்பில் delete for everyone-க்கு பதிலாக தவறுதலாக delete for me கொடுக்கும் நபர்களுக்காகவே ஒரு சூப்பர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப் என்பது ஸ்மார்ட்ஃபோனை போல கிட்டத்தட்ட அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாகவே மாறிவிட்டது. முதலில் வெறுமென எஸ்எஸ்எஸ் போல தகவல்களை பரிமாறும் தளமாகவே இருந்து வந்த வாட்ஸ் அப் இன்றைக்கு அபரிமிதமான வசதிகளை கொண்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, வாட்ஸ் அப்பை போலவே மேலும் பல செயலிகளும் இணையச் சந்தைக்கு வரத் தொடங்கிவிட்டன. எனவே இந்த செயலிகளுடன் போட்டிப் போட்டும் நிலைக்கு வாட்ஸ் அப் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சமீபகாலமாக புதுப்புது வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தி வருகிறது.

 சிறுபான்மையினரின் ரியல் காவலன் நாங்கள்தான்! கிறிஸ்துமஸ் பெருவிழாவில்.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் சிறுபான்மையினரின் ரியல் காவலன் நாங்கள்தான்! கிறிஸ்துமஸ் பெருவிழாவில்.. எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

வில்லங்க மெசேஜ்கள்..

வில்லங்க மெசேஜ்கள்..

வாட்ஸ் அப் பொதுவான தளம் என்பதால் இதில் நமது குடும்பத்தினர், நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிவோர், பக்கத்து வீட்டுக்காரர் என அனைவருமே இருப்பர். அப்படி இருக்கையில், சில சமயங்களில் வேறு ஒருவருக்கு அனுப்ப வேண்டிய தகவலை தவறுதலாக மற்றவர்களுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு அதிகம். இது சாதாரண தகவலாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதுவே வில்லங்கமாக இருந்தால், உண்மையிலே அது பிரச்சினைதான்.

மானத்தை காப்பாற்றும் 'delete for everyone'

மானத்தை காப்பாற்றும் 'delete for everyone'

உதாரணமாக, நண்பர்களுக்கு இடையே பலர் சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியோ, கிண்டல் செய்தோ பேசுவது உண்டு. அதுபோன்ற மெசேஜ்கள் தப்பித் தவறி அலுவலக மேனஜருக்கு அனுப்பிவிட்டால் எப்படி இருக்கும்? இதுபோன்ற பிரச்சினைகள் ஆரம்பக்காலத்தில் இருந்தன. பின்னர், இதுபோன்று தவறுதாக அனுப்பப்படும் மெசேஜ்களை நீக்குவதற்கான வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது. அதாவது, அப்படி தவறுதலாக அனுப்பப்டும் மெசேஜ் மீது ஒரு நொடி விரலை தொடர்ந்து அழுத்தினால் அதில் 'delete for everyone' என்ற ஆப்ஷன் இருக்கும். இதை கொடுத்துவிட்டால் அந்த மெசேஜை நாமும் பார்க்க முடியாது. யாருக்கு அனுப்பினோமோ அவர்களாலும் பார்க்க முடியாது. அப்படி பல பேரின் மானத்தை 'delete for everyone' காப்பாற்றி இருக்கிறது.

அலறவிடும் delete for me

அலறவிடும் delete for me

ஆனால், அதே சமயத்தில் பலர் அவசரத்தில் 'delete for everyone'-க்கு பதிலாக delete for me கொடுத்து விடுவார்கள். அப்படி கொடுத்துவிட்டால் அவ்வளவுதான். அந்த மெசேஜை உங்களால் மட்டும்தான் பார்க்க முடியாது. ஆனால், அந்த மெசேஜை யாருக்கு அனுப்பினோமா அவர்கள் தாராளமாக பார்க்க முடியும். இப்படியாக, தனக்கு நெருக்கமானவர்களுக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ அல்லது யாருக்கு தெரியக்கூடாதோ அவர்களுக்கே அனுப்பி, delete for me கொடுத்து சிக்கி சின்னாபின்னமானவர்கள் பலர்.

காப்பாற்ற வந்த வசதி

காப்பாற்ற வந்த வசதி

இப்படிப்பட்ட ஜீவன்களை காப்பாற்றவே, வாட்ஸ் அப் தற்போது சூப்பர் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, 'delete for everyone'-க்கு பதிலாக delete for me கொடுத்து விட்டால்.. பதட்டப்பட வேண்டாம். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் இனி undo ஆப்ஷன் திரையில் 5 நொடிகள் தோன்றும். அதற்குள் அந்த undo ஆப்ஷனை கொடுத்துவிட்டால், டெலிட் ஆன மெசேஜ் மீண்டும் வந்துவிடும். அதை மீண்டும் அழுத்தி 'delete for everyone' கொடுத்துவிடலாம். ஆன்ட்ராய்டு, ஐபோன் என அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த புதிய அப்டேட் அறிமுகாமாகி உள்ளது.

English summary
A feature has been introduced in WhatsApp for people who mistakenly give delete for me instead of delete for everyone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X