"டெல்லிக்கு அருகே.." ஷேக் ஹசீனா இப்போது இந்தியாவில் எங்கு தங்கியுள்ளார்? வெளியான புதிய தகவல்
டெல்லி: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அங்கு நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹசீனா இந்தியாவில் வசித்து வரும் நிலையில், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே ஹசீனா எங்கு வசிக்கிறார் என்பது குறித்து இப்போது சில முக்கிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் திடீர் போராட்டம் வெடித்தது. அப்போது அங்குப் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார். அந்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டோரின் வரிச்சுகளுக்குத் தரப்பட்ட இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் எனச் சொல்லி இந்தப் போராட்டம் வெடித்தது. அப்போது மாணவர் போராட்டம் திடீரென ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராகத் திரும்பியது.

ஹசீனா
ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறி சென்ற நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். அந்தப் போராட்டத்தின்போது பலர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான வழக்கில் தான் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தற்போது 78 வயதான ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அவரது அரசு கவிழ்க்கப்பட்டபோது இந்தியா வந்தார். அவர் ராணுவ ஹெலிகாப்டரில் வங்கதேசத்தை விட்டு வெளியேறினார். டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமான தளத்தில் அவர் தரையிறங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் லண்டனுக்கு செல்லவுள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், சில காரணங்களால் அவரால் லண்டனுக்கு செல்ல முடியவில்லை.
எங்கே இருக்கிறார்
அப்போது முதலே அவர் இந்தியாவில் தான் வசித்து வருகிறார். பாதுகாப்பு காரணங்களால் அவர் எங்கு இருக்கிறார் என்பதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அவர் டெல்லி புறநகரில் உள்ள லுட்யென்ஸ் பங்களா மண்டலத்தில் (Lutyens Bungalow Zone) வசித்து வருவதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் ஹசீனா டெல்லியில் ஒரு பூங்காவில் வாக்கிங் சென்ற வீடியோ இணையத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.
மத்திய வெளியுறவு துறை
முன்னதாக ஹசீனா இந்தியாவுக்கு வந்தது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார். அப்போது அமைச்சர் ஜெய்சங்கர், "ஆகஸ்ட் 5ம் தேதி அந்நாட்டில் அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவையும் மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் டாக்காவில் கூடினர். பாதுகாப்புத் துறை தலைவர்களுடனான சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய முடிவு செய்தார் என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம்.
மிகக் குறுகிய அறிவிப்பில், இந்தியாவுக்கு வருவதற்கான ஒப்புதலை அவர் கேட்டார். அதே நேரத்தில் வங்கதேச அதிகாரிகளிடமிருந்தும் விமான அனுமதி கோரிக்கை எங்களுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து அவர் டெல்லிக்கு வந்தார்" என்று குறிப்பிட்டார்.
தீர்ப்பு
கடந்தாண்டு ஜூன் மாதம் வங்கதேச போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக அந்நாட்டுச் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அதில் தான் ஹசீனா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஹசீனாவின் இரண்டு உதவியாளர்களான முன்னாள் உள்துறை அமைச்சர் அசாத்துஸ்ஸமான் கான் கமல் மற்றும் முன்னாள் காவல்துறை தலைவர் சௌத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.. அதில் கமலுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மாமுனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications