மும்பையில் தான் வீடுகள் ரொம்பவே காஸ்ட்லி.. அது சரி அப்போ சென்னைக்கு எந்த இடம்! யாரும் எதிர்பார்க்கல
டெல்லி: இந்தியாவில் எந்த நகரங்களின் வீடுகள் விலை ரொம்பவே அதிகமாக இருக்கிறது.. எங்கே குறைவு என்பது குறித்த பட்டியலை நைட் ஃபிராங்க் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது
இந்தியாவில் இப்போது மிக வேகமாக நகரமயமாக்கல் நடந்து வருகிறது. வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் பலர் பெருநகரங்களுக்கு வருகிறார்கள். இதனால் பெருநகரங்கள் நெரிசல் மிகுந்தாக மாறி வருகிறது.

இதனால் நகரங்களில் வீடுகள் ரொம்பவே காஸ்ட்லியானதாக மாறி வருகிறது. நாம் சம்பாதிக்கும் பெருந்தொகை வீடுகளுக்கு வாடகையாக மட்டுமே கட்ட வேண்டி இருக்கிறது. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைக் கடுமையாகப் பாதிக்கிறது
வீடுகள்: இதற்கிடையே இந்தியா முழுக்க முக்கிய நகரங்களில் வீடுகளின் மதிப்பு எந்தளவில் இருக்கிறது என்பது குறித்த தரவுகளை நைட் ஃபிராங்க் இந்தியா என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.. 2023இல் பல நகரங்களில் வீட்டுக் கடன் விகிதங்கள் அதிகரிப்பால் விலை அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி அகமதாபாத் நகரில் தான் வீடுகள் ரொம்பவே மலிவாக இருக்கிறது. புனே, கொல்கத்தா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
சராசரி மாத வருமானத்தில் எத்தனை சதவிகிதம் வீட்டின் ஈஎம்ஐ-க்கு செல்கிறது என்பதை வைத்து இதைக் கணக்கிட்டுள்ளனர். கடந்த 2010 முதல் 2021 வரை நாட்டின் எட்டு நகரங்களிலும் வீட்டின் வாடகை கணிசமாக அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. நாட்டில் பண வீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 250 bps உயர்த்தியுள்ளது. இது நகரங்களில் வீட்டின் வாடகையைப் பாதித்துள்ள நிலையில், ஈஎம்ஐ விகிதம் 14.4% வரை அதிகரித்துள்ளது.
எங்கே காஸ்ட்லி: தேவைக்கு ஏற்ப குறைந்த விலை வீடுகள் இல்லாததே விலை அதிகரிக்கக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. சராசரியாக இந்தியாவில் இருக்கும் முக்கிய நகரங்களில் சுமார் 40% வரை ஈஎம்ஐக்கு செலுத்த வேண்டி இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் சில நகரங்களில் 50% மேல் ஈஎம்ஐக்கு செலுத்த வேண்டி இருக்கிறது. 50% மேல் என்பது ரொம்பவே அதிகமான தொகை என்றும் இது பெரும்பாலான இந்தியக் குடும்பங்களால் சமாளிக்க முடியாதது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் மிகவும் விலையுயர்ந்த வீட்டுச் சந்தையாக மும்பை இருக்கிறது.. மும்பையைப் பொறுத்தவரை, மொத்த வருமானத்தில் 55% வரை வீட்டிற்கான ஈஎம்ஐ-இல் செல்கிறது. அதாவது மும்பையில் ஒரு குடும்பம் வீட்டை வாங்க வேண்டும் என ஹோம் லோன் எடுத்தால்.. அவர்கள் தங்கள் வருமானத்தில் 50%க்கு மேல் வீட்டுக் கடனுக்கு மட்டும் ஈஎம்ஐயாக செலுத்த வேண்டி இருக்கும்.
சென்னைக்கு எந்த இடம்: இதில் இரண்டாவது இடத்தில் ஹைதராபாத் வருகிறது. இங்கே மொத்த தொகையில் 31% ஈஎம்ஐயாக செலுத்த வேண்டி இருக்கிறது. மூன்றாவது இடத்தில், டெல்லி தேசிய தலைநகர் பகுதி வருகிறது.. இங்கே மொத்த வருமானத்தில் 30% வீட்டுக் கடன் ஈஎம்ஐ-களுக்காக செலுத்த வேண்டி இருக்கிறது.
அடுத்து இதில் 4ஆவது இடத்தில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை வருகிறது. இங்கே சுமார் 28% ஈஎம்ஐயாக செலுத்த வேண்டி இருக்கிறது. மகாராஷ்டிராவின் புனே நகரம் 26% உடன் 5ஆவது இடத்தில் வருகிறது. அதேபோல மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவிலும் மொத்த வருமானத்தில் 26% தொகையை ஈஎம்ஐயாக செலுத்த வேண்டி இருக்கிறது.
இந்தப் பட்டியலில் குஜராத்தில் உள்ள அகமதாபாத் தான் கடைசி இடத்தில் வருகிறது. இங்கே வீடுகளின் விலை சற்று குறைவாகவே இருக்கிறது.. இங்கே மொத்த வருமானத்தில் 23% வரை வீட்டுக் கடன் ஈஎம்ஐக்கு செலுத்த வேண்டி இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வீடுகள்: கடந்த ஓராண்டில் பெருநகரங்களில் வாழ ஆகும் செலவு அதிகரித்தே இருக்கிறது.. இதனால் வீடுகளின் மதிப்பும் கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 50 லட்சத்திற்கும் குறைவான வீடுகளின் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளில் 50 லட்சத்திற்கும் குறைவான வீடுகளின் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளது. அதேநேரம் ஒரு கோடியைக் காட்டிலும் அதிக மதிப்பு கொண்ட வீடுகள் விற்பனை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications