டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹார்வர்ட் முதல் அயோத்தி வரை! தந்தையின் தீர்ப்பையே மாற்றி எழுதிய தனயன்! யார் இந்த டி.ஒய்.சந்திரசூட்?

Google Oneindia Tamil News

டெல்லி : உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சட்டம் படித்தவர் என்பதோடு, அவரது தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான உமேஷ் உதய் லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திர சூட்டை நியமிக்க பரிந்துரைக்கப்படுள்ளது.

இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து சந்திர சூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நவம்பர் ஒன்பதாம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இதனையடுத்து அவரது பின்னணி குறித்து அறிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

’பொன்னி நதி பாக்கனுமே’ மோடில் அன்புமணி! அடுத்து ’ஆப்பரேசன் அரியலூர்’! பாமக போடும் பலே திட்டம்! ’பொன்னி நதி பாக்கனுமே’ மோடில் அன்புமணி! அடுத்து ’ஆப்பரேசன் அரியலூர்’! பாமக போடும் பலே திட்டம்!

டி.ஒய். சந்திர சூட்

டி.ஒய். சந்திர சூட்

சிறந்த வழக்கறிஞரான சந்திர சூட் 1990ஆம் ஆண்டுகளில் மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றினார். அதற்கு முன்னதாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வழக்கறிஞராக பணியாற்றியவர்க் உச்ச நீதிமன்றத்திலும் மும்பை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞர் பயிற்சி பெற்றிருந்தார்.

வகித்த பதவிகள்

வகித்த பதவிகள்

முன்னதாக கூடுதல் செலிசிஸ்டர் ஜெனரலாகவும் நியமிக்கப்பட்ட அவர் 2000ஆம் ஆண்டில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த சந்திர சூட், 2016 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். பின்னர் உயர்நீதிமன்றங்களுக்கான தலைமை நீதிபதிகளை பரிந்துரை செய்யும் ஐந்து பேர் அடங்கிய கொலிஜியம் உறுப்பினராக 2021ஆம் ஆண்டு பதவியேற்றார்.

முனைவர் பட்டம்

முனைவர் பட்டம்

பல்வேறு நாடுகளில் சட்டப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியராகவும் பணியாற்றிய சந்திர சூட் பொருளாதாரத்திலும் கணிதத்திலும் பட்டம் பெற்றுள்ளார். டெல்லியில் 1982 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த அவர் பின்னர் 1983ஆம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் சட்டப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் பல புகழ்பெற்ற வழக்குகளை பணியாற்றியிருக்கிறார்.

தந்தையும் நீதிபதி

தந்தையும் நீதிபதி

இவரது தந்தை யஸ்வந்த் விஷ்ணு சந்திரசூத் நீதிபதியாக இருந்தவர் தான் குறிப்பாக இந்தியாவின் நீண்ட கால தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் என்ற பெருமை அவரது தந்தைக்கு உள்ளது பலருக்கு தெரியாதது. திருமண தாண்டிய உறவு தவறு என அவரது தந்தை ஒய்.வி சந்திரசூட் 1985 வழங்கிய தீர்ப்பையே மாற்றி சட்டப்பிரிவு 497 பெண்களின் சுயமரியாதைக்கு எதிரானது என இவர் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. நீண்ட கால விவகாரமான அயோத்தி விசாரணை குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்ததும் முக்கியமானதாகும்.

English summary
As the new Chief Justice of the Supreme Court, Chandrachud has been appointed, he studied law at Harvard University and his father Yashwant Vishnu Chandrachud also served as Chief Justice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X