Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சத்திலிருந்து மீட்ட "தமிழர்..!" பசுமை புரட்சி ஹீரோ எம்எஸ்.சுவாமிநாதன்! பாரத ரத்னா பெருமை கொள்ளும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ். சுவாமிநாதனுக்குப் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் யார்.. நாட்டிற்காக அவர் தந்த பங்களிப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

மத்திய அரசு இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்குப் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் மட்டுமின்றி முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங்கிற்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Who is MS Swaminathan the man behind India Green Revolution for whom Bharat Ratna was announced

இதில் எம்.எஸ்.சுவாமிநாதன் நாட்டில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்.. நாட்டையே பஞ்சத்தில் இருந்து மீட்டு வந்தவர்களில் முக்கியமானவர். இந்த எம்.எஸ்.சுவாமிநாதன் யார்.. அவர் இந்தியாவுக்குச் செய்தது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.

எம்.எஸ்.சுவாமிநாதன்: வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன் ஒரு மரபியல் நிபுணர் ஆவார். இந்தியாவின் வேளாண் துறையை ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் காரணமாகவே அவர் "இந்தியா பசுமைப் புரட்சியின் தந்தை" என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

1960களில் இந்தியர்களுக்குத் தேவையான உணவைப் போதியளவில் உற்பத்தி செய்வதில் சிக்கல் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பஞ்சம் அடிக்கடி ஏற்படும் நிகழ்வாகவே இருந்தது. ஆனால், சில ஆண்டுகளில் அந்த நிலையை மொத்தமாக மாற்றி, உணவு உற்பத்தியில் தன்னிறைவடைய வைத்தவர் தான் எம்.எஸ்.சுவாமிநாதன். இவர் கொண்டு வந்த பசுமைப் புரட்சி நாட்டை மொத்தமாக மாற்றியது. பஞ்சம் என்பது வெறும் புத்தகங்களில் மட்டும் இருக்கும் விஷயமாக மாறிப் போனது.

கும்பகோணம்: எம்.எஸ்.சுவாமிநாதன் 1925ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 7ஆம் தேதி கும்பகோணத்தில் பிறந்தவர். அவரது பெற்றோர் அந்தக் காலத்திலேயே அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர். இவர் இளைஞனாக இருந்த போது 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரைக் கடுமையாகப் பாதித்தது. பின்னாட்களில் வேளாண் துறையில் இவர் புதுமைகளைப் புகுத்த இதுவும் முக்கிய காரணம்.

சென்னை வேளாண் கல்லூரி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் படித்த இவர், தொடர்ந்து 1952இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர் இந்தியக் குடிமைப் பணிகளில் பல ஆராய்ச்சி மற்றும் நிர்வாகப் பதவிகளை வகித்தார்.

வங்கத்தில் ஏற்படப் பஞ்சம்: முன்பே குறிப்பிட்டது போல வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அப்போது போதியளவில் உணவு கிடைக்காமல் பஞ்சத்தில் பலரும் உயிரிழந்தனர். அதன் பின்னரே வாழ்நாள் முழுக்க வேளாண் துறையில் புதுமைகளைப் புகுத்த செலவழிக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் மெக்சிகன் கோதுமை வகைகளை அவர் கொண்டு வந்தார். மேலும், நவீன விவசாய முறைகளை மேம்படுத்துவதிலும் அதை நாடு முழுக்க உள்ள விவசாயிகளிடம் சென்று சேர்ப்பதிலும் அவர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அவரது நடவடிக்கைகள் இந்தியாவின் குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகள் கூட அதிக மகசூலை உற்பத்தி செய்ய உதவும் திறமையான விவசாய முறைக்கு வழி வகுத்தது.

கவனம்: அவரது ஆய்வுகள் அதிக மகசூல் பெறும் வழிமுறைகளை மட்டும் பார்க்கவில்லை,. அத்துடன் நோய்களால் பாதிக்கப்படாத நெல் வகைகளைக் கண்டறிவதிலும் அவர் கவனம் செலுத்தினார். மேலும், அந்த நெல் வகைகளை இந்தியாவின் மண் மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றதாகவும் மாற்றவும் இவரது ஆய்வுகள் உதவியது.

இதற்கிடையே அவர் வேளான் துறையில் பல்வேறு ஆய்வுப் பணிகளையும் செய்துள்ளார். குறிப்பாக 1950களில் உருளைக்கிழங்கின் தோற்றம் மற்றும் பரிணாம செயல்முறைகள் குறித்த அவரது ஆய்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 1950 மற்றும் 1980 வரையிலான காலகட்டத்தில் அவர் பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.

சாதனைகள்: மேலும், 1972 முதல் 1979 வரை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் டைரக்டர் ஜெனரலாக சுவாமிநாதன் பணியாற்றினார். அப்போது கொண்டு வரப்பட்ட விவசாயக் கொள்கைகள் தான் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டது. இது மட்டுமின்றி நாடு முழுக்க இருக்கும் விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். விவசாயிகள் ஆணையத்தின் தலைவராக இருந்த அவர், தேசிய விவசாயிகள் நலக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்காற்றினார்,

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+