குழந்தைகள் உயிரை குடித்த இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா? கேட்கிறது WHO
டெல்லி: மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என இந்தியாவிடம் உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பி உள்ளது. மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது தெரிந்தால் தான் எச்சரிக்க முடியும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தில், 1 முதல் 7 வயது வரை உள்ள 14 குழந்தைகள், அடுத்தடுத்து உயிரிழந்தனர். திடீரென ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு, உயிரிழப்புக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதற்கான காரணம் குறித்து, அம்மாநில அரசு விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் செயல்படும், ஸ்ரீசன் பார்மா என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிஃப்' இருமல் மருந்து, மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட 'நெக்ஸ்ட்ரோ டி.எஸ்.' மருந்துகள் காரணம் என்பது தெரியவந்தது.

இறந்த குழந்தைகளின் சிறுநீரக திசுவில், 'டை எத்திலீன் கிளைசால்' என்ற ரசாயன வேதிப்பொருள் இருந்தது தெரியவந்தது. பெயின்ட், மை போன்ற பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருந்தது. இதையடுத்து, மத்திய பிரதேச அரசு, இந்த மருந்து நிறுவனத்தை சோதனை செய்து, நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
இதனையடுத்து அந்த மருந்துக்கு தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், புதுச்சேரி, உ.பி., ஜார்க்கண்ட், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் கிளை ஆலை காஞ்சிபுரம் மாவட்டம் சுக்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்நிலையில், இந்த மருந்தை சாப்பிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4 குழந்தைகள் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை உயர்ந்தது. இந்த சம்பவத்தில் பிரவின் சோனி என்ற டாக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய அரசிடம் உலக சுகாதார அமைப்பு கேள்வி எழுப்பி உள்ளது. இதற்கு இந்திய அரசு அளிக்கும் பதிலை வைத்து, மற்ற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications