டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏன் இப்படி பாரபட்சமாக செயல்படுறீங்க.. ஊடகங்கள் மீது அசோக் கெலாட் பாய்ச்சல்.. ஏன் தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து அம்மாநில முதல்வரிடம் செய்தியாளர்களிடம் கேட்கையில், 'ராஜஸ்தானில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன' என்று ஊடகங்களை விமர்சித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சியில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவரை தேர்ந்தெடுக்க வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

 என்னங்க.. என்ன விட்டு போய்ட்டீங்களே! அழுதுபுரண்ட ஒத்தரோசா! தட்டில் பார்த்தால் கருப்பா! ஷாக் நெல்லை! என்னங்க.. என்ன விட்டு போய்ட்டீங்களே! அழுதுபுரண்ட ஒத்தரோசா! தட்டில் பார்த்தால் கருப்பா! ஷாக் நெல்லை!

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல்

இதற்காக இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கலும் தொடங்கியது. இத்தேர்தலில் போட்டியிட மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்கள் இருவருக்கும் மட்டுமே தற்போது போட்டி நிலவுகிறது. யார் வேண்டுமானாலும் வேட்பு மனு தாக்கல் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதியில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் சசி தரூருக்கும் இடையே மட்டும் நேரடி போட்டி நிலவுகிறது.

போட்டியிடவில்லை

போட்டியிடவில்லை

ஆனால் சசி தரூரை விட் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் ஜி23 தலைவர்கள் கூட மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்கின்றனர். முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கு போட்டியிட முடிவு செய்த அசோக் கெலாட், இறுதியில் தேர்தலில் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை இருப்பதால், அசோக் கெலாட் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார்.

அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி

அசோக் கெலாட்டுக்கு நெருக்கடி

ஆனால் ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் ராஜினாமா செய்தால் அப்பதவியை அவரது ஆதரவாளர் ஒருவருக்கே தர வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனை வலியுறுத்தி 82 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகவும் அறிவித்தனர். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அசொக் கெலாட் மீது கட்சி மேலிடம் கடும் அதிருப்தி அடைந்ததாக சொல்லப்பட்டது. சோனியா காந்தியை சந்தித்து விளக்கம் அளித்த அசோக் கெலாட் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு ஆதரவானவன்

ஊடகங்களுக்கு ஆதரவானவன்

இந்த நிலையில், ஜெய்பூரில் செய்தியாளர்களை அசோக் கெலாட் சந்தித்தார். அப்போது ஊடகங்கள் மீது தனது அதிருப்தியை அசோக் கெலாட் வெளிப்படுத்தினார். அசோக் கெலாட் கூறுகையில், ''ஊடகங்கள் கிங்மேக்கராக மாறியிருக்கின்றன. ஊடகங்கள் பாரபட்சமாக நடந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது. நான் ஊடகங்களுக்கு ஆதரவானவன். ஆனாலும் ஊடகங்கள் என்னை விட்டு வைப்பதில்லை. ராஜஸ்தானில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நமக்கு எதிராகவே

நமக்கு எதிராகவே

ஊடகங்களுக்கு எதிராக பழிவாங்கும் எண்ணத்துடன் நடப்பவன் நான் அல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்'' என்றார். அசோக் கெலாட் மேலும் கூறுகையில், ''முன்பு ஆட்சியில் ஒரு நிலையற்ற தன்மை இருந்தது. இதனால், எதாவது நடவடிக்கை எடுத்தால் அது நமக்கு எதிராகவே திரும்பி விடுமோ என்ற அச்சத்தில் அதிகாரிகள் இதற்கு முன்பு இருந்தனர்'' என்றார்.

அதானி குழுமம் குறித்து...

அதானி குழுமம் குறித்து...

அப்போது அதானி குழுமம் பற்றி காங்கிரஸ் கட்சித் தலைமை கடுமையான விமர்சனங்கள் முன்வைத்து வரும் அதேவேளையில், ராஜஸ்தானில் தொழில் தொடங்க நீங்கள் அழைப்பு விடுத்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், அதானி குழுமம் விதிகளை முறையாக பின்பற்றினால், முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்'' என்றார்.

English summary
When the chief minister was asked about the political chaos in the state of Rajasthan, he criticized the media and said, 'Whenever there is a crisis in Rajasthan, the media plays an important role'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X