விமானம் பறக்கும்போது இண்டர்நெட் வசதி இல்லாதது ஏன்? தயாநிதி மாறன் கேள்வி.. விளக்கிய மத்திய அமைச்சர்
டெல்லி: இந்திய விமானங்களில் இணைய சேவை ஏன் இல்லை? என்று சென்னை மத்திய தொகுதியின் எம்பியான தயாநிதி மாறன் நேற்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கமளித்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தின் பூஜ்ஜிய நேரத்தில் சென்னை மத்திய தொகுதியின் எம்பியாக இருக்கும் தயாநிதி மாறன் நேற்று லோக்சபாவில் ஒரு கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பாக தயாநிதி மாறன், ‛‛விமான பயணத்தின்போது இணைய சேவை வசதி ஏன் இல்லை? உலக வரைபடத்தில் பார்த்தால் சர்வதேச விமான பயணங்களில் இணைய சேவை கிடைக்காத ஒரே ஒரு இடம் இந்தியாதான். இது நாட்டின் டிஜிட்டல் துறையில் நிலவும் பற்றாக்குறையை காட்டுகிறது. இந்திய வான்வெளி பரப்பிலும் விமானங்களுக்குள் வைஃபை வசதியை அனுமதிக்க வேண்டும்'' என்று கேள்வி கூறினார்.
இதற்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், தற்போதைய மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அப்போது அவர், ‛‛இந்த விதிகளை வரையறுப்பது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் பொறுப்பு. தொலை தொடர்பு துறையும் இதற்கான விதிமுறைகளை வகுத்து வருகிறது. நாம் வளர்ந்த நாடாக, நம் சேவைகளைக் கொண்டிருக்கும்போது 6G தொழில்நுட்பத்தில் உலகை வழிநடத்துவோம்'' என்றார்.
இந்த வேளையில் தயாநிதி மாறன் ‛‛நம்முடைய வான்வெளி பரப்பில் விமானங்கள் செல்லும்போது ஏன் இணைய சேவைகளை தடை செய்கிறீர்கள்? நான் சென்னையில் இருந்து டெல்லிக்கு வரும்வரை இரண்டரை மணி நேரம் இணைய வசதி இல்லாமல் தான் இருந்தேன். நாடு முழுவதும் இணைய சேவை கிடைக்க அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை?" என்று கேள்வி கேட்டார்.
அதற்கு ஜோதிராதித்ய சிந்தியா, ‛‛"விமான நிறுவனங்கள் ஒவ்வொரு விமானத்திலும் ட்ரான்ஸ்பாண்டர்களை பொருத்த வேண்டும். அப்போதுதான் சிக்னல்கள் கிடைக்கும். ட்ரான்ஸ்பாண்டர்கள் பொருத்துவது விமான நிறுவனங்களின் திறனை சார்ந்து உள்ளது'' என்று கூறினார்.
இதையடுத்து தயாநிதி மாறன், ‛‛எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையின் விலை ஏன் அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது?. இது கிராமப்புற மக்களை பாதிக்கும். இதை மலிவாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்’’ என்று வாதம் வைத்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications